சங்கீத புத்தகம் 51:1-4

சங்கீத புத்தகம் 51:1-4 TAERV

தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும். என் பாவங்களை அழித்துவிடும். தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும். என் பாவங்களைக் கழுவிவிடும். என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்! நான் பாவம் செய்தேனென அறிவேன். அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன். நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன். தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன். நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன். உமது முடிவுகள் நியாயமானவை.