இதைப்போலவே நான் புதிய ஒன்று பிறக்க இடமில்லாமல் வலிக்குக் காரணமாக இருக்கமாட்டேன்.” கர்த்தர் இதனைச் சொல்கிறார், “நான் வாக்குறுதிச் செய்கிறேன். நான் உங்களது பிரசவ வலிக்குக் காரணமாக இருந்தால், புதிய நாட்டை உங்களுக்குத் தராமல் நிறுத்தமாட்டேன்.” உங்கள் தேவன் இதைச் சொன்னார். எருசலேமே மகிழ்ச்சிகொள்! எருசலேமை நேசிக்கிற ஜனங்களாகிய நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள்! எருசலேமிற்கு துன்பங்கள் ஏற்பட்டன. எனவே, ஜனங்களில் சிலர் வருத்தமாய் இருந்தீர்கள். ஆனால், இப்போது நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கலாம்! ஏனென்றால், மார்பிலிருந்து பால் வருவது போன்று நீங்கள் இரக்கத்தைப் பெறுவீர்கள். அந்தப் பால் உண்மையில் உங்களைத் திருப்திப்படுத்தும். நீங்கள் அந்தப் பாலைக் குடிப்பீர்கள். நீங்கள் உண்மையில் எருசலேமின் மகிமையை அனுபவிப்பீர்கள். கர்த்தர் கூறுகிறார், “பார், நான் உங்களுக்குச் சமாதானத்தைக் கொடுப்பேன். இந்தச் சமாதானம் உங்களுக்குப் பெருக்கெடுத்து வரும் ஆற்றினைப்போல் பாயும். அனைத்து நாடுகளில் உள்ள செல்வங்களும் உன்னிடம் பாய்ந்து வரும். அந்தச் செல்வம் வெள்ளம்போல் வரும். நீங்கள் சிறு குழந்தைகளைப்போன்று இருப்பீர்கள். நீங்கள் பாலைக் (செல்வம்) குடிப்பீர்கள்! நான் உங்களைத் தூக்கி எனது கைகளில் வைத்துக்கொள்வேன். நான் உங்களை எனது முழங்காலில் வைத்து தாலாட்டுவேன். ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன்! நீங்கள் எருசலேமில் ஆறுதல் செய்யப்படுவீர்கள்.” நீங்கள் உண்மையில் மகிழ்ச்சியடைகிறவற்றைப் பார்ப்பீர்கள். நீங்கள் விடுதலை பெற்று புல்லைப்போல வளருவீர்கள். கர்த்தருடைய ஊழியர்கள் அவருடைய வல்லமையைக் காண்பார்கள். ஆனால், கர்த்தருடைய பகைவர்கள் அவரது கோபத்தைப் பார்ப்பார்கள்.
வாசிக்கவும் ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 66
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 66:9-14
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்