“வானத்திலிருந்து மழையும் பனியும் பெய்கிறது. அவை தரையைத் தொட்டுத் குளிரச் செய்யும்வரை, திரும்ப வானத்துக்குப்போகாது. பிறகு தரையில் தாவரங்கள் முளைத்து வளரும். இத்தாவரங்கள் விவசாயிகளுக்கு விதைகளை உருவாக்கும். ஜனங்கள் இந்தத் தானியங்களைப் பயன்படுத்தி தமக்கு உண்ண அப்பத்தைத் தயார் செய்கிறார்கள். இதே வழியில், எனது வார்த்தைகள் என் வாயை விட்டு வரும். அவை எதையும் செய்யாமல் வெறுமனே என்னிடம் திரும்பாது. எனது வார்த்தைகள் எதைச் செய்யவேண்டுமென்று நான் அனுப்புகிறேனோ அவற்றைச் செய்யும்! எனது வார்த்தைகள் எதைச் செய்ய நான் அனுப்பினேனோ அதை வெற்றிகரமாகச் செய்யும்! “எனது வார்த்தைகள் மகிழ்ச்சியோடு வெளியே சென்று சமாதானத்தைக் கொண்டுவரும். மலைகளும் குன்றுகளும் மகிழ்ச்சியோடு ஆடத்தொடங்கும். வயலிலுள்ள மரங்கள் எல்லாம் தம் கைகளைத் தட்டும். முட்செடிப் புதருக்குப் பதிலாக அவ்விடங்களில் பருத்த தேவதாரு மரங்கள் வளரும். களைகள் இருந்த இடத்தில் பசுமையான மரங்கள் வளரும். இவை கர்த்தருடைய புகழைப் பரப்பும். கர்த்தர் வல்லமையுடையவர் என்பதற்கு இவை சான்றாகும். இந்தச் சான்றுகள் ஒருபோதும் அழியாது.”
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 55:10-13
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்