ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:3-6

ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:3-6 TAERV

கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும், உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர். எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள். ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு. ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார். அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார். கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார். அது புழுதிக்குள் விழும். பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும்.