நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 8
8
சவுல் ராஜாவின் குடும்ப வரலாறு
1பென்யமீன் பேலாவின் தந்தை. பேலா பென்யமீனின் மூத்த குமாரன், அஸ்பால் பென்யமீனின் இரண்டாவது குமாரன். அகராக் பென்யமீனின் மூன்றாவது குமாரன். 2நோகா, பென்யமீனின் நான்காவது குமாரன். ரப்பா, பென்யமீனின் ஐந்தாவது குமாரன்.
3-5ஆதார், கேரா, அபியூத், அபிசுவா, நாமான், அகோவா, கேரா, செப்புப்பான், ஊராம் ஆகியோர் பேலாவின் குமாரர்கள்.
6-7இவர்கள் ஏகூதின் சந்ததியினர். கேபாவின் குடும்பங்களுக்குத் தலைவர்களாக இருந்தனர். இவர்கள், தம் வீடுகளை விட்டு, விட்டு மனாகாத்துக்குப் போகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். நாமான், அகியா, கேரா ஆகியோர் ஏகூதின் சந்ததியினர். கேரா இவர்களைக் கட்டாயமாக வீட்டைவிட்டு அழைத்துச்சென்றான். ஊசா, அகியூத் ஆகியோர் தந்தையானான் கேரா.
8மோவாப்பில் சகாராயீம் தன் மனைவிகளான ஊசிம், பாராள் ஆகியோரை விவாகரத்து செய்தான். பின்னர் பிற மனைவியோடு சில பிள்ளைகளைப் பெற்றான். 9-10சகாராயீம் தன் மனைவியான ஓதேசாலிடம் யோவாப், சீபியா, மேசா, மல்காம், எயூஸ், சாகியா, மிர்மா, ஆகிய பிள்ளைகளைப் பெற்றான். இவர்கள் சகாராயீமின் குமாரர்கள். 11சகாராயிமுக்கும் ஊசீமுக்கும் இரண்டு குமாரர்கள். அவர்களின் பெயர் அபிதூப், எல்பால்.
12-13எல்பாலின் குமாரர்களாக ஏபேர், மீஷாம், சாமேத், பெரீயா, சேமா ஆகியோர் பிறந்தனர். சாமேத் ஓனா, லோத் ஆகிய நகரங்களையும், லோத்தைச் சுற்றிலும் சிறிய ஊர்களையும் உருவாக்கினான். பெரீயாவும், சேமாவும் ஆயயோன் ஜனங்களின் தலைவர்களாயிருந்தனர். இவர்கள் காத்தியர்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.
14பெரீயாவின் குமாரர்களாக சாஷாக், ஏரேமோத், 15செபதியா, ஆராத், ஆதேர், 16மிகாயேல், இஸ்பா, யோகா ஆகியோர் பிறந்தனர். 17எல்பாலின் குமாரர்களாக செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ரபேர், 18இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் ஆகியோர் பிறந்தனர்.
19சிமேயின் குமாரர்களாக யாக்கீம், சிக்ரி, சப்தி, 20எலியேனாய், சில்தாய், எலியேல், 21அதாயா, பெராயா, சிம்ராத், ஆகியோர் பிறந்தனர்.
22சாஷாக்கின் குமாரர்களாக இஸ்பான், ஏபேர், ஏலியேல், 23அப்தோன், சிக்ரி, ஆனான், 24அனனியா, ஏலாம், அந்தோதியா, 25இபிதியா, பெனூயேல் ஆகியோர் பிறந்தனர்.
26எரொகோமின் குமாரர்களாகச் சம்சேராய், செகரியா, அத்தாலியா, 27யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் பிறந்தனர்.
28இவர்கள் அனைவரும் குடும்பத் தலைவர்கள். இவர்களின் வம்ச வரலாற்றில் அவ்வாறு தான் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.
29யேயேல் கிபியோனின் தந்தை. இவன் கிபியோனில் குடியிருந்தான். யேயேலின் மனைவியின் பெயர் மாக்காள். 30இவனது மூத்த குமாரன் அப்தோன், மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப், 31கேதோர், அகியோ, சேகேர் ஆகியோர். 32மிக்லோத், சிமியாவின் தந்தை. இப்பிள்ளைகள் எருசலேமில் தம் உறவினர்களோடு வாழ்ந்தனர்.
33நேர், கீசின் தந்தை, கீஸ் சவுலின் தந்தை. சவுல் யோனத்தான் மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தந்தை.
34யோனத்தானின் குமாரன் மேரிபால், மேரி பாலின் குமாரத்தி மீகா. 35மீகாவின் குமாரர்கள் பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் ஆகியோர்.
36ஆகாஸ் யோகதாவின் தந்தை. யோகதா, அலமேத்துக்கும் அஸ்மாவேத்துக்கும் சிம்ரிக்கும் தந்தை. சிம்ரி மோசாவின் தந்தை. 37மோசா, பினியாவின் தந்தை, பினியா, ரப்பாவின் தந்தை. ரப்பா, எலியாசாவின் தந்தை. எலியாசா, ஆத்சேலின் தந்தை.
38ஆத்சேலுக்கு ஆறு குமாரர்கள். அவர்களின் பெயர்: அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் அனைவரும் ஆத்சேலின் பிள்ளைகள்.
39ஆத்சேலின் சகோதரன் ஏசேக். ஏசேக்கின் முதல் குமாரன் ஊலாம், அவனது இரண்டாவது குமாரன் ஏகூஸ், அவனது மூன்றாவது குமாரன் எலிபேலேத். 40ஊலாமின் பிள்ளைகள் வீரமுடையவர்களாக வில் வீரர்களாய் இருந்தனர். அவர்களுக்கும் நிறைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இருந்தனர். மொத்தத்தில் அவர்களின் எண்ணிக்கை 150 ஆகும்.
இவர்கள் அனைவரும் பென்யமீனின் சந்ததியினர் ஆவார்கள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 8: TAERV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International