உன்னதப்பாட்டு முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் சாலொமோன் அரசனால் எழுதப்பட்டது. இது சாலொமோனுக்கும், ஒரு சூலமித்திய பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட காதலைப்பற்றி கூறுகிறது. அவர்களிடையே நடந்த உரையாடல்கள் பாடல் வடிவில் எழுதப்பட்டிருக்கிறது.
காதலர் ஒருவர்மேல் ஒருவர் கொள்ளும் ஆசை; காதலினால் உள்ளத்தில் எழும் மென்மையான உணர்வுகள், காதலர் ஒருவரோடொருவர் கூடியிருப்பதில் காணும் இன்பம் ஆகியவற்றை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. மனித உள்ளத்தில் எழும் காதல் உணர்வு இறைவனால் கொடுக்கப்பட்டதே. இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அதை அனுபவித்தால், அது நன்மையும் தூய்மையுமானதே. பல வேதாகம விளக்க உரையாளர்கள் இக்காதலை இறைவன் இஸ்ரயேலர்மேல் கொண்டிருக்கும் அன்பிற்கு ஒப்பிடுகிறார்கள். இன்னும் பலர் இக்காதலை கிறிஸ்து தமது திருச்சபையில் கொண்டிருக்கும் அன்பிற்கு ஒப்பிடுகிறார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

உன்னதப்பாட்டு முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்