சங்கீதம் 99

99
சங்கீதம் 99
1யெகோவா ஆட்சி செய்கிறார்,
நாடுகள் நடுங்கட்டும்;
அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;
பூமி அதிரட்டும்.
2சீயோனிலே யெகோவா பெரியவர்;
அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.
3பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்;
அவர் பரிசுத்தமானவர்.
4அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்;
நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்;
நீர் யாக்கோபில்
நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர்.
5நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி,
அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்;
அவர் பரிசுத்தமானவர்.
6அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்;
அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்;
அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;
அவர் அவர்களுக்குப் பதிலளித்தார்.
7அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;
அவர் அவர்களுக்குக் கொடுத்த
அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள்.
8எங்கள் இறைவனாகிய யெகோவாவே,
நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்;
இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும்,
நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர்.
9நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி
அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்;
ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 99: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்