சங்கீதம் 8

8
சங்கீதம் 8
கித்தீத் வாத்தியத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
1எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,
பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு புகழ் உடையதாய் இருக்கிறது!
நீர் வானங்களுக்கு மேலாக
உமது மகிமையை வைத்திருக்கிறீர்.
2உமது எதிரிகளையும் பழிவாங்குபவர்களையும் ஒடுக்க,
உமது பகைவர்களின் நிமித்தம் பிள்ளைகள் மற்றும் குழந்தைகளின்
உதடுகளிலிருந்து வரும் துதியின் மூலமாக
வல்லமையை உறுதிப்படுத்தினீர்.
3உமது விரல்களின் வேலைப்பாடான வானங்களையும்
அவற்றில் நீர் பதித்து வைத்த
சந்திரனையும் நட்சத்திரங்களையும் பற்றி
நான் சிந்திக்கும்போது,
4மனுக்குலத்தில் நீர் கரிசனை கொள்வதற்கும்,
மனிதரில் நீர் அக்கறை கொள்வதற்கும் அவர்கள் எம்மாத்திரம்?#8:4 எபிரெய மொழியில் மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் கவனிப்பதற்கும் அவன் எம்மாத்திரம்?
5நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து,
அவர்களை#8:5 அவர்களை அல்லது அவனை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.
6உமது கைகளின் வேலைப்பாடுகளின்மேல் அவர்களை ஆளுநர்களாக்கினீர்;
அனைத்தையும்:
7எல்லா ஆட்டு மந்தைகளையும் மாட்டு மந்தைகளையும்
காட்டு மிருகங்களையும்
8ஆகாயத்துப் பறவைகளையும்
கடல் மீன்களையும்
கடற்பரப்பில் நீந்தும் அனைத்தையும் அவர்களுடைய பாதங்களுக்குக்கீழ் வைத்தீர்.
9எங்கள் ஆண்டவராகிய யெகோவாவே,
பூமியெங்கும் உமது பெயர் எவ்வளவு மாட்சிமை உடையதாய் இருக்கிறது!

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 8: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்