சங்கீதம் 142

142
சங்கீதம் 142
தாவீது குகையிலிருந்தபோது செய்த ஜெபமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.
1நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;
நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன்.
2அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்;
என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன்.
3என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில்,
நீரே என் வழியை அறிகிறவர்;
நான் நடக்கும் பாதையில்
மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
4நோக்கிப்பாரும், உதவிக்காக என் வலதுபக்கத்தில் யாரும் இல்லை;
என்னில் அக்கறை கொள்பவர்கள் யாருமில்லை.
எனக்குப் புகலிடம் இல்லை;
என்னைக் கவனிக்க எவருமில்லை.
5யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்;
“நீரே என் புகலிடம்,
வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு” என்று நான் சொல்கிறேன்.
6என் கதறலுக்குச் செவிகொடும்;
நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;
என்னைப் பிடிக்க பின்தொடர்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்;
ஏனெனில் அவர்கள் என்னைவிட பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.
7நான் உமது பெயரைத் துதிக்கும்படி,
என் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கும்;
அப்பொழுது நீர் எனக்குச் செய்யும் நன்மையினிமித்தம்,
நீதிமான்கள் என்னைச் சுற்றிச் சேர்ந்துகொள்வார்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 142: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்