பிலிப்பியர் முன்னுரை

முன்னுரை
இந்தக் கடிதம் கி.பி. 60 ஆம் ஆண்டிலிருந்து 61 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் பிலிப்பி பட்டணத்திலுள்ள திருச்சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுலினால் எழுதப்பட்டது. ரோம் பட்டணத்திலுள்ள சிறையிலிருந்தே அவர் இதை எழுதினார். பிலிப்பி பட்டணத்திலுள்ள சில நெருங்கிய நண்பர்கள் அவருடைய தேவைகளைச் சந்திக்கும்படியாக அவருக்குப் பணம் அனுப்பியிருந்தார்கள். தான் பெற்றுக்கொண்டதையும், ரோம் பட்டணத்தில் தாம் எதிர்கொண்ட சில பிரச்சனைகளைக் குறித்தும் அவர்களுக்குத் தெரிவிக்கும்படியாகவே அவர் இதை எழுதுகிறார். விசுவாசிகள் மகிழ்ச்சியாய் இருக்கவேண்டுமென்று கூறுகிறார். ஆவிக்குரிய வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்போது கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாம் இறைவனுக்குப் பணிந்திருக்கவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

பிலிப்பியர் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்