மல்கியா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 433 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்டது. அக்காலத்தில் ஆலயம் திரும்பவும் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. நெகேமியா ஆளுநனாய் இருந்தான். பாபிலோனில் நாடு கடத்தப்பட்டவர்களாயிருந்து, திரும்பவும் தங்கள் நாட்டில் வந்து குடியமர்ந்த இஸ்ரயேல் மக்களுக்கே மல்கியா இறைவாக்குரைத்தார். மக்களிடையே ஆவிக்குரிய காரியங்களைப் பற்றிய ஆர்வம் மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் ஆவிக்குரிய காரியங்களில் மக்களை ஊக்குவிப்பதாக இவருடைய செய்தி அமைந்திருந்தது. இப்புத்தகத்தின் முடிவில் கிறிஸ்துவின் வருகையையும், அவருக்குமுன் வந்தவரான யோவான் ஸ்நானகனின் வருகையையும் அவர் முன்னறிவிக்கிறார். வரப்போகும் கிறிஸ்து இறைவனுடைய வல்லமையுடன் வருவார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

மல்கியா முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்