எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள். அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள். ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள். அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள். அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள். அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான். உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான். அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது. அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார். அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார். அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும், அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார். அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு: நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி, பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக என்றும் வாக்குக் கொடுத்திருந்தார். “என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய். நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய், இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய். இருளில் வாழ்கிறவர்களுக்கும் மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும், நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.” அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் லூக்கா 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா 1:57-80
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்