யோனா உள்ளடக்கம்

உள்ளடக்கம்
இப்புத்தகம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. யோனா இஸ்ரயேலில் பிறந்த ஒரு இறைவாக்கினர். இவர் அசீரியருக்கு மனந்திரும்புதலைப் பிரசங்கிக்கும்படியாக இறைவனால் அழைக்கப்பட்டார். அந்நாட்களில் அசீரிய வல்லரசு இஸ்ரயேலைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. அசீரியாவின் தலைநகரமான நினிவேக்குப் போகும்படி இறைவன் இவருக்குச் சொன்னபோது, பிற நாட்டவர்களுக்கு இரட்சிப்பை அறிவிக்க அவர் விரும்பாததால் அவர் கப்பல் ஏறி இறைவனைவிட்டு ஓடுகிறார். இறுதியாக அவர் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து, பிரசங்கிக்கும்படி நினிவேக்குப் போகிறார்.
இறைவன் எல்லா மனிதர்மேலும் அன்பாயிருக்கிறார். எல்லோருக்கும் நன்மை செய்யவே அவர் விரும்புகிறார் என்பதையே இப்புத்தகம் முக்கியமாக எடுத்துக்காட்டுகிறது. அதோடு இயற்கையை அவர் கட்டுப்படுத்தும் ஆற்றலுடையவர் என்பதையும் இது காண்பிக்கிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோனா உள்ளடக்கம்: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்