எரேமியா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் காலகட்டத்தில் எரேமியாவினால் எழுதப்பட்டது. எரேமியாவின் வாழ்நாட்களில் பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாரினால் எருசலேம் கைப்பற்றப்பட்டு, ஆலயமும் அழிக்கப்பட்டது. அப்பொழுது ஒரு புதிய ஆரம்பம் உண்டாகும் என்பதே எரேமியாவினுடைய செய்தியின் முக்கிய பொருளாய் இருந்தது. எரேமியா புலம்பும் இறைவாக்கினன் என அழைக்கப்பட்டான். தனது மக்கள் இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் தண்டனையை அனுபவித்தபடியால் அவன் தன் மக்களுக்காக அழுதான். ஆயினும் இறைவன் தனது மக்களுக்காக ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையை எரேமியா தனது மக்களுக்கு அறிவித்தான். அவன் ஒரு எதிர்பார்ப்பின் செய்தியையும் கொடுக்கிறான். யூதா அரசிலுள்ள மக்கள் இறைவனைப் புறக்கணித்தபோதும், இறைவன் அவர்களைப் புறக்கணிக்கவில்லை என்றும், அவர் அவர்களுக்காக தமது வல்லமையைக் காண்பிப்பார் என்றும் மக்களுக்கு எரேமியா நம்பிக்கையை ஏற்படுத்துகிறான்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எரேமியா முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்