மழையும் உறைபனியும் வானத்திலிருந்து கீழே இறங்குகின்றன; அவை பூமிக்கு நீர்ப்பாய்ச்சி, அதில் முளையை எழும்பப்பண்ணி வளரச் செய்யாமல் அவை திரும்பிச் செல்வதில்லை. எனவே அவை விதைப்பவனுக்கு விதையையும், உண்பவனுக்கு உணவையும் கொடுக்கின்றன. என் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தையும் அப்படியே இருக்கிறது: நான் விரும்பியவற்றைச் செய்து, நான் அதை அனுப்பிய நோக்கத்தை நிறைவேற்றாமல் அது வெறுமையாய் என்னிடம் திரும்பி வராது. நீங்கள் பாபிலோனிலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறி சமாதானத்துடன் வழிநடத்தப்படுவீர்கள்; மலைகளும் குன்றுகளும் உங்கள் முன்பாக ஆர்ப்பரித்துப் பாடும்; வெளியின் மரங்கள் யாவும் கைகொட்டும். முட்செடிகளுக்குப் பதிலாக தேவதாரு மரங்களும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச் செடிகளும் முளைக்கும். இது யெகோவாவுக்கு புகழ்ச்சியாகவும், அழியாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.”
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் ஏசாயா 55
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஏசாயா 55:10-13
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்