இப்போது யெகோவா சொல்வது இதுவே: யாக்கோபே, உன்னைப் படைத்தவரும், இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவரும் சொல்வதாவது, “பயப்படாதே, நான் உன்னை மீட்டிருக்கிறேன்; நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்திருக்கிறேன்; நீ என்னுடையவன். நீ தண்ணீரைக் கடக்கும்போது, நான் உன்னுடன் இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது, அவை உன்னை அள்ளிக்கொண்டு போகாது; நீ நெருப்பில் நடக்கும்போதும் எரிந்து போகமாட்டாய். நெருப்பு சுவாலை உன்னை எரித்துப்போடாது. ஏனெனில், நானே உங்கள் இறைவனாகிய யெகோவா, இஸ்ரயேலின் பரிசுத்தராகிய நானே உன் இரட்சகர்; நான் உன்னை மீட்கும் பொருளாக எகிப்தையும், உனக்குப் பதிலாக எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுக்கிறேன். நீ என் பார்வையில் அருமையானவன், மதிப்பிற்குரியவன்; நான் உன்னில் அன்பாயிருக்கிறபடியினால், உனக்குப் பதிலாக மனிதரையும், உன் உயிருக்கு மாற்றீடாக நாடுகளையும் கொடுப்பேன். பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; நான் கிழக்கிலிருந்து உன் பிள்ளைகளைக் கொண்டுவருவேன், மேற்கிலிருந்து உங்களை ஒன்றுசேர்ப்பேன்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் ஏசாயா 43
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஏசாயா 43:1-5
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்