ஓசியா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. தாவீதின் ஆட்சியிலிருந்த அரசு, அக்காலத்தில் பிளவுபட்டது. வடக்கு அரசு இஸ்ரயேல் என்றும், தெற்கு அரசு யூதா என்றும் அழைக்கப்பட்டது. ஓசியா வடநாட்டு அரசான இஸ்ரயேலுக்கு இறைவாக்குரைத்தார். இப்புத்தகத்தின் முதல் மூன்று அதிகாரங்களும் ஓசியாவின் வாழ்க்கையைக்குறித்துக் கூறுகிறது. மற்ற அதிகாரங்கள் அவருடைய செய்தியை உள்ளடக்குகிறது. கி.மு. 722 ஆம் வருடத்தில் இஸ்ரயேல் வீழ்ச்சியடைவதற்கு முன்னிருந்த காலப்பகுதியில் ஓசியா இறைவாக்கினராய் இருந்தார். அவருடைய மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கை இஸ்ரயேலின் நிலைமையை பிரதிபலிக்கிறது. அவருடைய மனைவி அவரைக் கைவிட்டு வேசித்தனத்தில் ஈடுபடுவதற்காகப் போனதுபோலவே, இஸ்ரயேலும் இறைவனைக் கைவிட்டு, வேறு தெய்வங்களைத் தேடிச்சென்றது. ஆனாலும் ஓசியா தொடர்ந்து தன் மனைவிக்கு அன்புகாட்டி, அவளைத் திரும்பவும் தனது வீட்டிற்கு கொண்டுவருகிறார். இவ்விதமாகவே இறைவனும் இஸ்ரயேல்மீது அன்பாயிருக்கிறார் என்றும், அவர் அதை மீட்டுக்கொள்வார் என்றும் காண்பிக்கப்படுகிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஓசியா முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்