எசேக்கியேல் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இறைவாக்கினன் எசேக்கியேலினால் எழுதப்பட்டது. ஒரு ஆசாரியனாக வளர்க்கப்பட்ட எசேக்கியேல், யூதர் பாபிலோனியரால் நாடுகடத்தப்பட்டபோது, இவரும் நாடுகடத்தப்பட்டார். அங்கே அவர் ஒரு இறைவாக்கினர் ஆகினார். எருசலேமில் எஞ்சியிருந்தோர்மேல் வரவிருந்த நியாயத்தீர்ப்பைக் குறித்தே இவர் இறைவாக்குரைத்தார். ஆயினும் அவரோடிருந்த யூதர் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கூறியபடி கி.மு. 586 இல் எருசலேம் அழிக்கப்பட்டது. எசேக்கியேல் தன்னை இஸ்ரயேல்மேல் ஏற்படுத்தப்பட்ட ஒரு மேய்ப்பனாகவும் காவற்காரனாகவும் கருதினார். மேய்ப்பன் என்ற வகையில் மக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், காவற்காரன் என்ற வகையில் வரவிருக்கும் ஆபத்தைக் குறித்து அவர்களை எச்சரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் உணர்கிறார். மாறாத பரிசுத்தத்தையே அவர் வலியுறுத்துகிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

எசேக்கியேல் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்