ஆமோஸ் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 8 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆமோஸ் யூதாவின் தென்திசை அரசிலிருந்த தெக்கோவா நாட்டைச் சேர்ந்தவன். இறைவன் அவனை வட அரசான இஸ்ரயேலுக்கு இறைவாக்கு உரைக்க அனுப்பினார். ஆமோஸ் இஸ்ரயேலின் அயல் நாட்டவர்மேல் இறைவனின் நியாயத்தீர்ப்பை அறிவித்துவிட்டு, இறுதியாக இஸ்ரயேலின்மேல் இறைவாக்கு உரைக்கிறார். இஸ்ரயேலின் பாவங்களை அவர் கடுமையாகக் கண்டிக்கிறார். குறிப்பாக, அவர்களிடையே காணப்பட்ட அநீதி, நிர்வாகச் சீர்கேடு, பேராசை, பொய்யான வழிபாடு ஆகிய பாவங்களைக் கண்டிக்கிறார். இப்புத்தகம் இறைவனின் நீதியை வலியுறுத்துகிறது. இறைவன் நீதியானவராய் இருப்பதனால், தம்முடைய மக்களும் நீதியானவர்களாய் இருக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். இதுவே இதன் பிரதான செய்தியாகும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஆமோஸ் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்