2 சாமுயேல் முன்னுரை
முன்னுரை
இப்புத்தகம் இஸ்ரயேலின் வரலாறு எழுதப்பட்டுள்ள இராஜாக்களின் புத்தகங்களான நான்கு புத்தகங்களில் இரண்டாவது புத்தகமாகவே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது.
2 சாமுயேல் புத்தகமானது தாவீது முழு இஸ்ரயேல் நாட்டின்மேலும் அரசனாக ஏற்படுத்தப்பட்ட காலம் தொடங்கி, அவனுடைய மரணத்துக்கு முன்புவரை நடந்த சம்பவங்களை உள்ளடக்குகிறது. யோசுவாவினால் ஆரம்பிக்கப்பட்ட வாக்களிக்கப்பட்ட நாட்டின் கைப்பற்றுதலை, தாவீது தன்னைச் சுற்றியிருந்த நாடுகளுக்கெதிரான யுத்தங்களில் வெற்றிகொள்வதின் மூலமாக நிறைவுசெய்தான். தாவீது உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்தான். ஆனால் எருசலேம் ஆலயத்தைக் கட்டுவதற்கு அவன் அனுமதிக்கப்படவில்லை. தாவீது தனது ஆட்சியின் செழிப்பான காலகட்டத்தில் பட்சேபாளுடன் பாவத்தில் விழுந்தான். பின்னர் அவனுடைய மகன் அப்சலோம் தாவீதுக்கு எதிராகக் கலகம்செய்து, அரசனாக வரமுயன்றான். இதனால் தாவீது தப்பியோடி அப்சலோம் தோற்கடிக்கப்பட்டபின் திரும்பிவந்தான். இப்புத்தகம் தாவீதின் கடைசி நாட்களுடன் முடிவடைகிறது.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
2 சாமுயேல் முன்னுரை: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.