1 யோவான் 2:1-3

1 யோவான் 2:1-3 TCV

என் அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு நான் உங்களுக்கு இதை எழுதுகிறேன். ஆனால், யாராவது பாவம்செய்தால், நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிற ஒருவர் இருக்கிறார். நீதியுள்ளவரான இயேசுகிறிஸ்துவே அவர். நம்முடைய பாவங்களுக்கான நிவாரணப்பலி அவரே. நம்முடைய பாவங்களுக்கு மாத்திரமல்ல, முழு உலகத்தவருடைய பாவங்களுக்குமான நிவாரணப்பலி அவரே. இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நாம் அவரை அறிந்திருக்கிறோம் என்பதை உறுதியாய் அறிந்துகொள்கிறோம்.