1 நாளாகமம் 8
8
பென்யமீனியனான சவுலின் வம்சாவழி
1பென்யமீனின் மகன்கள்:
பேலா முதற்பேறானவன்,
இரண்டாவது மகன் அஸ்பேல், மூன்றாவது மகன் அகராக்,
2நான்காவது மகன் நோகா, ஐந்தாவது மகன் ரப்பா.
3பேலாவின் மகன்கள்:
ஆதார், கேரா, அபியூத்; 4அபிசுவா, நாமான், அகோவா, 5கேரா, செப்புப்பான், ஊராம்.
6ஏகூத்தின் சந்ததிகள்: இவர்கள் மனாகாத்திற்கு நாடுகடத்தப்பட்டு கேபாவின் குடிகளின் தலைவர்களாயிருந்தவர்கள்:
7நாமான், அகியா, கேரா. ஊசா, அகியூத் என்பவர்களின் தகப்பன் கேரா இவர்களை நாடுகடத்திக் கொண்டுபோனான்.
8சகராயீம் தனது மனைவிகளான ஊசிம், பாராள் என்பவர்களை விவாகரத்துச் செய்தபின் மோவாப் நாட்டிலே அவனுக்கு மகன்கள் பிறந்தார்கள். 9அவனுடைய மனைவி ஒதேசாள் என்பவள் யோவாப், சிபியா, மேசா, மல்காம், 10எயூஸ், சாகியா, மிர்மா ஆகியோரைப் பெற்றாள். இவர்களே குடும்பங்களின் தலைவர்களான அவனுடைய மகன்கள். 11அவனுடைய மனைவி ஊசிம் மூலம் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
12எல்பாலின் மகன்கள்:
ஏபேர், மீஷாம், ஷேமேத்; ஷேமேத் ஓனோவையும், லோதையும் அதன் கிராமங்களையும் கட்டினான். 13எல்பாலின் மற்ற பிள்ளைகள் பெரீயா, சேமா என்பவர்கள். இவர்கள் ஆயலோனில் இருந்த குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்து, காத்தின் குடிகளைத் துரத்திவிட்டனர்.
14அகியோ, சாஷாக், எரேமோத் 15செபதியா, அராத், ஏதேர், 16மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
17செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர், 18இஸ்மெராயி, இஸ்லியா, யோவாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
19யாக்கீம், சிக்ரி, சப்தி 20எலியேனாய், சில்தாய், எலியேல், 21அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சீமேயியின் மகன்கள்.
22இஸ்பான், ஏபேர், ஏலியேல், 23அப்தோன், சிக்ரி, ஆனான், 24அனனியா, ஏலாம், அந்தோதியா, 25இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
26சம்செராய், செகரியா, அத்தாலியா, 27யாரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரோகாமின் மகன்கள்.
28இவர்கள் எல்லோரும் வம்சங்களுக்கேற்ப பதிவு செய்யப்பட்டபடி குடும்பங்களின் தலைவர்களாகவும், முதன்மையானவர்களாகவும் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
29கிபியோனின் தலைவனான யெகியேல் கிபியோனில் வாழ்ந்தான்.
இவனது மனைவியின் பெயர் மாக்காள். 30இவனது மூத்த மகன் அப்தோன்; அவனுக்குப்பின் பிறந்தவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப், 31கேதோர், அகியோ, சேகேர், 32மிக்லோத் என்பவர்கள். மிக்லோத் சிமியாவின் தகப்பன். இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
33நேர் என்பவன் கீஷின் தகப்பன்; கீஷ் சவுலின் தகப்பன்; சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தகப்பன்.
34யோனத்தானின் மகன்:
மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன்.
35மீகாவின் மகன்கள்:
பித்தோன், மெலெக், தரேயா, ஆகாஸ்.
36ஆகாஸ் யோகதாவின் தகப்பன்; யோகதா அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி ஆகியோரின் தகப்பன். சிம்ரி மோசாவின் தகப்பன். 37மோசா பினியாவின் தகப்பன்; அவன் மகன் ரப்பா, அவன் மகன் எலியாசா, அவன் மகன் ஆத்சேல்,
38ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர்;
அவர்களின் அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மயேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் யாவரும் ஆத்சேரின் மகன்கள்.
39அவனுடைய சகோதரனான ஏசேக்கின் மகன்கள்:
முதற்பேறானவன் ஊலாம், இரண்டாவது மகன் எயூஷ், மூன்றாவது மகன் எலிபேலேத். 40ஊலாமின் மகன்கள் தைரியமுள்ள வில் ஏந்தும் வீரர்களாயிருந்தனர். இவர்களுக்கு மகன்களும், பேரப்பிள்ளைகளுமாக நூற்றைம்பதுபேர் இருந்தனர்.
இவர்கள் எல்லோரும் பென்யமீனின் சந்ததிகள்.
தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:
1 நாளாகமம் 8: TCV
சிறப்புக்கூறு
பகிர்
நகல்
உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.