அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாக வருகிற எல்லா மக்களையும் அழிக்கப் பார்ப்பேன். நான் தாவீது குடும்பத்தார்கள் மேலும் எருசலேம் குடிமக்கள் மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைமகனுக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாக இருக்கும். தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், நாத்தான் குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், லேவி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், சீமேயி குடும்பத்தார் தனியாகவும், அவர்களுடைய பெண்கள் தனியாகவும், மீதமுள்ள எல்லா குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனிதர்கள் தனித்தனியாகவும் அவர்களுடைய பெண்கள் தனித்தனியாகவும் புலம்புவார்கள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் சகரி 12
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: சகரி 12:9-14
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்