1
வெளிப்படுத்தல் 3:20
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இதோ! நான் கதவுக்கு அருகில் நின்று தட்டிக் கொண்டிருக்கிறேன். யாராவது என்னுடைய குரலைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து அவருடன் உணவருந்துவேன், அவரும் என்னுடன் உணவருந்துவார்.
ஒப்பீடு
வெளிப்படுத்தல் 3:20 ஆராயுங்கள்
2
வெளிப்படுத்தல் 3:15-16
நான் உன்னுடைய செயல்களை அறிந்திருக்கிறேன். நீ குளிராகவும் இல்லை, அனலாகவும் இல்லை. நீ குளிராகவோ அல்லது அனலாகவோ இருப்பதே விரும்பத்தக்கது. ஆனால் நீயோ அனலுமின்றி, குளிருமின்றி வெதுவெதுப்பாய் இருக்கின்றபடியால் நான் உன்னை என்னுடைய வாயிலிருந்து துப்பி விடுவேன்.
வெளிப்படுத்தல் 3:15-16 ஆராயுங்கள்
3
வெளிப்படுத்தல் 3:19
நான் யார் மீது அன்பு செலுத்துகின்றேனோ, அவர்களைக் கடிந்துகொண்டு, தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே ஆர்வமுள்ளவனாய் இருந்து மனந்திரும்பு.
வெளிப்படுத்தல் 3:19 ஆராயுங்கள்
4
வெளிப்படுத்தல் 3:8
உன்னுடைய செயல்களை நான் அறிந்திருக்கிறேன். இதோ, உனக்கு முன்பாக நான் திறக்கப்பட்ட ஒரு கதவை வைத்திருக்கிறேன், அதை யாராலும் மூட முடியாது. உன்னிடம் சிறிதளவே வலிமை உண்டு என்று எனக்குத் தெரியும். நீ என்னுடைய வார்த்தையை கடைப்பிடித்தாய், என்னுடைய பெயரை மறுதலிக்கவில்லை.
வெளிப்படுத்தல் 3:8 ஆராயுங்கள்
5
வெளிப்படுத்தல் 3:21
நான் வெற்றியடைந்து என் பிதாவினுடைய அரியணையில் அவருடன் வீற்றிருப்பதுபோல, வெற்றி பெறுகின்றவர்களுக்கு என்னுடைய அரியணையில் என்னுடன் உட்காருவதற்கான உரிமையைக் கொடுப்பேன்.
வெளிப்படுத்தல் 3:21 ஆராயுங்கள்
6
வெளிப்படுத்தல் 3:17
‘நான் செல்வந்தன், நான் செல்வத்தைச் சம்பாதித்திருக்கிறேன், எனக்கு எவ்வித தேவையுமில்லை’ என்று நீ சொல்கின்றாய். ஆனால் நீயோ அவலமானவன், பரிதாபத்திற்குரியவன், ஏழ்மையானவன், பார்வையற்றவன், உடையற்றவன் என்பதை உணராதவனாய் இருக்கின்றாய்.
வெளிப்படுத்தல் 3:17 ஆராயுங்கள்
7
வெளிப்படுத்தல் 3:10
பொறுமையுடன் சகிக்கும்படி நான் உனக்குக் கொடுத்த என் கட்டளையை நீ கைக்கொண்டாய். ஆகவே, பூமியில் உள்ளவர்களைச் சோதிக்கும்படியாக, முழு உலகத்தின் மேலும் வரப்போகும் கடும் துன்பத்திலிருந்து நானும் உன்னைப் பாதுகாப்பேன்.
வெளிப்படுத்தல் 3:10 ஆராயுங்கள்
8
வெளிப்படுத்தல் 3:11
நான் விரைவில் வருகின்றேன். உனக்குரிய கிரீடத்தை யாரும் எடுத்துக்கொள்ளாதபடி உன்னிடம் இருப்பதை பற்றிப் பிடித்துக்கொள்.
வெளிப்படுத்தல் 3:11 ஆராயுங்கள்
9
வெளிப்படுத்தல் 3:2
விழித்தெழு! மரணமடையும் தறுவாயில் எஞ்சியிருப்பவர்களைப் பலப்படுத்து. ஏனெனில், என்னுடைய இறைவனின் பார்வையில், உன்னுடைய செயல்களை நான் நிறைவுள்ளதாய் காணவில்லை.
வெளிப்படுத்தல் 3:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்