அவருடைய கண்கள், தீச்சுவாலை போல் இருந்தன. அவருடைய தலையில் பல கிரீடங்கள் இருந்தன. அவரைத் தவிர வேறு யாராலும் அறிய முடியாத ஒரு பெயர் அவர்மீது எழுதப்பட்டிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஒரு அங்கியை அவர் அணிந்திருந்தார். “இறைவனுடைய வார்த்தை” என்பதே அவருடைய பெயர்.