“உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், முதலில் அவன் உட்கார்ந்து, அதைக் கட்டி முடிப்பதற்குத் தன்னிடம் போதிய பணம் இருக்கின்றதா என்று கணக்குப் பார்க்காமல் இருப்பானோ? ஏனெனில், அத்திவாரத்தைப் போட்டுவிட்டு, அதைக் கட்டி முடிக்க அவனால் முடியாவிட்டால், அதைப் பார்க்கின்ற எல்லோரும், அவனைக் கேலி செய்வார்கள். ‘இவன் கட்டத் தொடங்கினான். ஆனாலும் இவனால் அதைக் கட்டி முடிக்க முடியவில்லை’ என்பார்கள்.