1
எபேசியர் 6:12
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஏனெனில், நமக்கு இருக்கும் போராட்டம் மனிதர்களோடு அல்ல. அது தீமையான ஆளுகைகளுக்கும், உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருண்ட உலகில் ஆட்சி செய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதாகவும், வானமண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது.
ஒப்பீடு
எபேசியர் 6:12 ஆராயுங்கள்
2
எபேசியர் 6:18
நீங்கள் அனைத்து வேளைகளிலும் எல்லாவிதமான மன்றாடல்களையும் வேண்டுதல்களையும் பரிசுத்த ஆவியானவரால் மன்றாடுங்கள். இதை மனதில்கொண்டு, விழிப்புடன் இருங்கள். பரிசுத்தவான்கள் அனைவருக்காகவும் எப்போதும் மன்றாடுங்கள்.
எபேசியர் 6:18 ஆராயுங்கள்
3
எபேசியர் 6:11
பிசாசின் தந்திரமான யுக்திகளை நீங்கள் எதிர்த்து நிற்கத் தக்கவர்களாய் இருக்கும்படி, இறைவனின் முழுப் போர்க் கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 6:11 ஆராயுங்கள்
4
எபேசியர் 6:13
எனவே, இறைவனின் முழுப் போர்க் கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள். அப்போது, தீமையின் நாளில் எதிரியின் தாக்குதலை எதிர்த்துப் போரிடவும், எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு உறுதியுடன் நிலைநிற்கவும் முடியும்.
எபேசியர் 6:13 ஆராயுங்கள்
5
எபேசியர் 6:16-17
இவை அனைத்துடன், விசுவாசத்தை கேடயமாக எடுத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டே, தீயவன் எய்கின்ற நெருப்பு அம்புகளை உங்களால் அணைக்க முடியும். இரட்சிப்பைத் தலைக் கவசமாக அணிந்துகொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவரால் தரப்பட்டிருக்கும் இறைவனுடைய வார்த்தையாகிய வாளை எடுத்துக்கொள்ளுங்கள்.
எபேசியர் 6:16-17 ஆராயுங்கள்
6
எபேசியர் 6:14-15
ஆகவே உங்களை ஆயத்தப்படுத்திக்கொள்ள, சத்தியத்தை உங்கள் இடுப்பைச் சுற்றி இடைப்பட்டியாகக் கட்டிக்கொண்டு, நீதியை மார்புக் கவசமாக அணிந்துகொண்டு, சமாதான நற்செய்தியை அறிவிப்பதற்கான தயார் நிலையை உங்கள் காலணியாக அணிந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 6:14-15 ஆராயுங்கள்
7
எபேசியர் 6:10
இறுதியாக, கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையிலும் ஆற்றல் பெற்றவர்களாக இருங்கள்.
எபேசியர் 6:10 ஆராயுங்கள்
8
எபேசியர் 6:2-3
“உங்கள் தந்தையையும் தாயையும் மதித்து நடவுங்கள்.” இதுவே வாக்குறுதியுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்ட முதலாவது கட்டளை. “அதன்படி உங்களுக்கு நன்மை உண்டாகும்; இந்த உலகத்தில் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள்” என்பதே அந்த வாக்குறுதி.
எபேசியர் 6:2-3 ஆராயுங்கள்
9
எபேசியர் 6:1
பிள்ளைகளே! கர்த்தரைப் பின்பற்றுகின்றவர்களாக நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது.
எபேசியர் 6:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்