விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்து உங்கள் இருதயங்களில் குடியிருக்கும்படி, இறைவன் தமது மகிமையின் நிறைவிலிருந்து தமது ஆவியானவர் மூலமாக வல்லமையைத் தந்து, உங்கள் உள்ளார்ந்த மனிதனை உறுதியாகப் பலப்படுத்த வேண்டும் என்று அவரிடம் மன்றாடுகிறேன். இதனால் நீங்கள் அன்பிலே வேரூன்றியவர்களாகவும், அதில் அத்திவாரம் இடப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். இவ்விதமாய் பரிசுத்தவான்கள் அனைவருடனும் சேர்ந்து, கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு அகலமானது, நீளமானது, உயரமானது, ஆழமானது என்பதை விளங்கிக்கொள்ளும் வல்லமையை நீங்கள் பெற்றுக்கொண்டவர்களாக, அறிவாற்றல்கள் அனைத்துக்கும் அப்பாற்பட்ட கிறிஸ்துவின் அன்பை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் நீங்கள் இறைவனின் முழுநிறைவினால் முழுவதுமாய் நிரப்பப்பட வேண்டும் என்றும் மன்றாடுகிறேன்.