எபேசியர் 1இலிருந்து பிரபலமான வேதாகம வசனங்கள்

உங்கள் மனக்கண்கள் தெளிவடைய வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். அப்பொழுதே, இறைவன் உங்களை அழைத்திருக்கின்ற அந்த எதிர்பார்ப்பையும், பரிசுத்தவான்களால் அவருக்குக் கிடைக்கின்ற மகிமையான உரிமைச் சொத்தின் உயர்மதிப்பையும், அத்துடன் எந்த வல்லமையை கிறிஸ்துவில் செயற்படுத்தி, அவரை மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, பரலோக அரசிலே தமது வலது பக்கத்தில் இறைவன் உட்கார வைக்க பயன்படுத்தினாரோ, அதே பெரிதான, அளவிட முடியாத வல்லமையை விசுவாசிக்கின்றவர்களாகிய நமக்கும் இறைவன் கொடுத்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். இவ்விதமாகவே, இந்தக் காலத்துக்கு மட்டுமல்ல இனி வரப்போகும் காலத்துக்கும் உரிய எல்லா ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் வல்லமைக்கும் அரசாட்சிக்கும், மற்றும் பெயரிடப்பட்டிருக்கும் எல்லாப் பெயர்களுக்கும் மேலாக இறைவன் கிறிஸ்துவை உயர்த்தினார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எபேசியர் 1