இவர்கள் நீதியின் வழியை அறிந்த பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுத்த கட்டளைகளை விட்டுத் திரும்பிப் போவதைவிட நீதியின் வழியை அறியாதவர்களாகவே இருந்திருந்தால் அதிக நலமாய் இருந்திருக்கும். “நாய் தான் வாந்தி எடுத்ததையே மீண்டும் தேடிப் போகின்றது,” மற்றும், “நீரால் கழுவப்பட்ட ஒரு பன்றி, மீண்டும் சேற்றில் புரளும்படி போகின்றது” என்ற பழமொழிகள் இவர்களுக்கு உண்மையாகப் பொருந்தும்.