1
1 பேதுரு 2:9
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஆனால் நீங்களோ, உங்களை இருளிலிருந்து தம்முடைய ஆச்சரியமான வெளிச்சத்திற்குள் அழைத்தவரின் சிறப்பை அறிவிக்கும்படி தெரிவு செய்யப்பட்ட மக்களாகவும், இறை அரச குருத்துவப் பிரிவாகவும், பரிசுத்த இனமாகவும், இறைவனின் உரிமைச் சொத்தான சமூகமாகவும் இருக்கின்றீர்கள்.
ஒப்பீடு
1 பேதுரு 2:9 ஆராயுங்கள்
2
1 பேதுரு 2:24-25
நாம் பாவங்களுக்கு மரணித்தவர்களாக இனிமேல் நீதியின் வழியில் வாழ்வதற்காக அவர் தாமே தமது உடலில் நமது பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவற்றைச் சிலுவை மரத்தின் மேல் சுமந்தார். “அவருடைய காயங்களால் நீங்கள் குணமடைந்திருக்கிறீர்கள்.” ஏனெனில், “நீங்கள் செம்மறியாடுகளைப் போல் வழிவிலகிச் சென்று கொண்டிருந்தீர்கள்.” ஆனால் இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களின் மேய்ப்பரும், பாதுகாவலருமாய் இருக்கின்ற கிறிஸ்துவிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.
1 பேதுரு 2:24-25 ஆராயுங்கள்
3
1 பேதுரு 2:10
முன்பு நீங்கள் மக்களாக இருக்கவில்லை, ஆனால் இப்பொழுதோ நீங்கள் இறைவனுடைய மக்கள். முன்பு நீங்கள் இறைவனுடைய இரக்கத்தைப் பெறாதிருந்தீர்கள், ஆனால் இப்பொழுதோ இரக்கத்தைப் பெற்றிருக்கிறீர்கள்.
1 பேதுரு 2:10 ஆராயுங்கள்
4
1 பேதுரு 2:2
புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல், தூய்மையான ஆவிக்குரிய பாலில் தாகமாய் இருங்கள். அப்போது அதன்மூலமாக உங்கள் இரட்சிப்பில் வளர்ச்சியடைவீர்கள்.
1 பேதுரு 2:2 ஆராயுங்கள்
5
1 பேதுரு 2:11-12
பிரியமான நண்பர்களே! இந்த உலகத்தில் அந்நியரும், பிறநாட்டவருமாய் இருக்கின்ற நீங்கள் பாவ ஆசைகளிலிருந்து விலகிக்கொள்ளுங்கள் என்று உங்களை நான் வேண்டிக்கொள்கிறேன். இந்தப் பாவ ஆசைகளே உங்களுக்கெதிராகப் போரிடுகின்றன. வெளிப்படையான நன்னடத்தை உள்ளவர்களாக வாழுங்கள். அப்போது இறைவனை அறியாதவர்கள் உங்களை தீமை செய்கின்றவர்கள் என்று குற்றம் சாட்டினாலும், அவர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு இறைவன் நம்மைச் சந்திக்கும் நாளில் இறைவனை மகிமைப்படுத்துவார்கள்.
1 பேதுரு 2:11-12 ஆராயுங்கள்
6
1 பேதுரு 2:5
இதனால் நீங்கள் இறைவனுக்கு ஏற்ற ஆவிக்குரிய பலிகளை இயேசு கிறிஸ்துவின் மூலமாய் செலுத்தும் பரிசுத்த குருத்துவப் பிரிவாக உயிருள்ள கட்டடக் கற்களைப் போல ஒரு ஆவிக்குரிய ஆலயமாகக் கட்டப்படுகிறீர்கள்.
1 பேதுரு 2:5 ஆராயுங்கள்
7
1 பேதுரு 2:1
இப்படியிருக்க அனைத்துத் தீமைகளையும், ஏமாற்றும் சுபாவத்தையும், வெளிவேடத்தையும், பொறாமையையும், எல்லாவிதமான அவதூறுப் பேச்சுக்களையும் உங்களைவிட்டு அகற்றுங்கள்.
1 பேதுரு 2:1 ஆராயுங்கள்
8
1 பேதுரு 2:4
இயேசுவே மனிதரால் நிராகரிக்கப்பட்ட, ஆனால் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட விலைமதிப்பற்ற வாழ்கின்ற கட்டடக் கல். அவரிடமே நீங்கள் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.
1 பேதுரு 2:4 ஆராயுங்கள்
9
1 பேதுரு 2:16
சுதந்திரமுடைய மனிதராய் வாழுங்கள், ஆனால் அந்த சுதந்திரத்தை உங்கள் தீய வாழ்க்கைக்கு ஒரு மூடுதிரையாக பயன்படுத்தாதீர்கள். மாறாக இறைவனுக்கு பணி புரியும் அடிமைகளாக வாழுங்கள்.
1 பேதுரு 2:16 ஆராயுங்கள்
10
1 பேதுரு 2:15
ஏனெனில் நன்மை செய்வதன் மூலமாக நீங்கள் மூடரின் அறிவீனப் பேச்சை அடக்க வேண்டும் என்பது இறைவனுடைய சித்தமாய் இருக்கின்றது.
1 பேதுரு 2:15 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்