1
1 கொரிந்தியர் 13:4-5
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அன்பு பொறுமையுள்ளது, தயவுள்ளது. அன்பு பொறாமையற்றது, தற்பெருமை பேசாது, அகந்தையாயிராது, வீம்புகொள்ளாது, அது தன்னலமற்றது, இலகுவில் கோபமடையாது, வன்மம் வைத்திருக்காது
ஒப்பீடு
1 கொரிந்தியர் 13:4-5 ஆராயுங்கள்
2
1 கொரிந்தியர் 13:7
அன்பு அனைத்தையும் தாங்கிக்கொள்ளும், அனைத்தையும் விசுவாசிக்கும், எப்போதும் எதிர்பார்ப்பு உடையதாய் இருக்கும். அன்பு அனைத்திலும் நிலைகுலையாது உறுதியாய் இருக்கும்.
1 கொரிந்தியர் 13:7 ஆராயுங்கள்
3
1 கொரிந்தியர் 13:6
தீமையில் மகிழ்ச்சியடையாமல், மெய்மையில் மகிழ்ச்சியடையும்.
1 கொரிந்தியர் 13:6 ஆராயுங்கள்
4
1 கொரிந்தியர் 13:13
இப்போது நிலைத்திருப்பவைகளான விசுவாசம், நல்ல எதிர்பார்ப்பு, அன்பு என்பவற்றுள் அன்பே மேன்மையானது.
1 கொரிந்தியர் 13:13 ஆராயுங்கள்
5
1 கொரிந்தியர் 13:8
அன்பு ஒருபோதும் தோல்வியடைந்து ஓயாது, இறைவாக்கு ஓய்ந்து போகும், வேற்றுமொழிகள் ஒழிந்து போகும், அறிவும் மறைந்து போகும்
1 கொரிந்தியர் 13:8 ஆராயுங்கள்
6
1 கொரிந்தியர் 13:1
நான் பல்வேறு மனித மொழிகளிலும் இறைதூதர்களின் மொழிகளிலும் பேசினாலும் அன்பற்றவனாய் இருந்தால், நான் வெறும் பேரொலி எழுப்பும் வெண்கலம், ஓசையெழுப்பும் கைத்தாளம்.
1 கொரிந்தியர் 13:1 ஆராயுங்கள்
7
1 கொரிந்தியர் 13:2
நான் இறைவாக்கு உரைக்கும் வரத்தை உடையவனாய், எல்லா மறைபொருள்களையும் எல்லா அறிவையும் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவனாய் இருந்தாலும், அத்துடன் மலைகளைப் பெயர்க்கும் விசுவாசமுடையவனாய் இருந்தாலும், அன்பற்றவனாய் இருந்தால் நான் அறவே வெற்று மனிதன்.
1 கொரிந்தியர் 13:2 ஆராயுங்கள்
8
1 கொரிந்தியர் 13:3
எனது உடைமைகளை நான் ஏழைகளுக்குக் கொடுத்தாலும், எனது உடலையே நெருப்பில் எரிக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தாலும், நான் அன்புள்ளவனாய் இல்லாது போனால், எனக்கு எப்பயனும் இல்லை.
1 கொரிந்தியர் 13:3 ஆராயுங்கள்
9
1 கொரிந்தியர் 13:11
நான் சிறு பிள்ளையாய் இருந்தபோது, ஒரு சிறு பிள்ளையைப் போலவே பேசினேன். ஒரு சிறு பிள்ளையைப் போலவே சிந்தித்தேன். ஒரு சிறு பிள்ளையின் மன எண்ணமே எனக்கிருந்தது. ஆனால் நான் ஒரு முழு வளர்ச்சி பெற்ற மனிதனானபோது சிறு பிள்ளைத்தனமான வழிகளைக் கைவிட்டேன்.
1 கொரிந்தியர் 13:11 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்