வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 51:17

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

6 நாட்களில்

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்.....மாற்கு 11:24 ஒருகாலத்தில் இது எல்லாம் எனக்கு எட்டாத கனி என்று இருந்தவைகளை-உண்மையான விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது ஏற்றகாலத்தில் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள். நமக்குள்ளே திசை தெரிந்து கொள்ள அல்லது சிக்கல் விடுவிக்க வேண்டும் என்ற ஆசை நம் வாழ்வின் ஒவ்வொரு மூலையிலும் - இருந்து வருகின்றது. உலகம் எனக்கு விடுக்கும் இந்த சவாலை நான் எப்படி மேற்கொள்வேன் என்பது நம் குடும்பத்தில், வேலைசெய்கின்ற இடத்தில் இருக்கும் கேள்வி. விசுவாசிக்கும் ஜெபம் என்றால் என்ன? ஏற்றகாலத்தில் நான் பெற்றுக் கொள்வேன் என்பதை நான் எதை வைத்து நம்புவது? போன்ற நல்ல கேள்விகளுக்கு- சத்தியத்தை -வேதாகம வார்த்தையைச்சார்ந்த பதிலை விசுவாசிக்கும் ஜெபத்தினால் மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தான் இந்த வேதபாட திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப் போகிறேம். வாருங்கள்- விசுவாசித்துப் பெற்றுக் கொள்வோம்.

ஆராதனையில் தேவனை தேடுவது

ஆராதனையில் தேவனை தேடுவது

8 நாட்கள்

நம்முடைய கர்த்தர் காணக்கூடாதவரும், நித்தியமானவரும், அழிவில்லாதவரும், கிரகிக்ககூடாதவரும், அவரே ஒரே தேவனுமாய் இருக்கிறார். ஆனால், நம்முடைய வாழ்க்கையோ கடினமாகக்கூடிய, நித்தியமற்ற மிக சாதாரணமானது. இந்த 8நாள் தியான திட்டம் நம்மை படைத்தவர் மீதான உங்கள் பயபக்தியை புதுப்பிக்கும். மேலும், நீங்கள் அவரை இன்னும் ஆழமாகவும், ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க உங்களை உற்சாகப்படுத்தும். நமது கர்த்தர் எவ்வளவு ஆச்சர்யமானவர் என்பதையும், அவர் ஏன் சகல மகிமைக்கும் கனத்திற்கும் பாத்திரர் என்பதையும் நாம் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். இந்த தியான திட்டத்தை எழுதியிருப்பவர் திருமதி ஏமி கிரோஷெல் அவர்கள். இந்த தியானம் அவரது "தேவனோடு உயர பறப்பது" என்ற தியானத்தின் ஒரு பகுதியாகும். இந்த இலவச தியான திட்டத்தை தொடர்ந்து முழுமையாக படிக்க www.SoarwithGod.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.