இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 27

21 நாள் உபவாசம்
21 நாட்கள்
உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.

சங்கீதம் மற்றும் நீதிமொழிகள் 31 நாட்களில்
31 நாட்கள்
சங்கீதம் மற்றும் நீதிமொழிகளில் பாடல்களும் கவிதைகளும் உரைநடைகளும் நிறைந்திருக்கிறது- இவை உண்மை ஆராதனையையும், வாஞ்சையையும், ஞானத்தையும், அன்பையும், நம்பிக்கையிழந்த நிலையையும், சத்தியத்தையும் வெளிப்படுத்துகின்றன. இந்தத் திட்டம் உங்களை சங்கீதம் மற்றும் நீதிமொழிகளின் வழியே முற்றிலும் 31 நாட்களிலேயே அழைத்துச் செல்லும். இங்கே நீங்கள் கர்த்தரை சந்திக்கலாம், மற்றும் வாழ்க்கையின் எல்லா விதமான அனுபவங்களுக்கும் தேவைப்படுகிற ஆறுதலையும் தேறுதலையும் உற்சாகத்தையும் கண்டு உணரலாம்.