இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 23:4
நிச்சயம்
4 நாட்கள்
தேவனால் மன்னிக்கப்பட்டிருக்கிறேன்; பரலோகம் செல்வேன் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய விருப்பம்! இந்த நிச்சயம் தேவனை சந்திப்பதன் மூலமாகவும் அவரது வார்த்தையை தியானம் செய்வதன் மூலமாகவும் அதிகரிக்கிறது. கீழ்க்கண்ட வசனங்களை மனப்பாடம் செய்வதால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் தேவனில் உறுதிப்பட அவை உங்களுக்கு உதவும். வேத வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாற்றப்படட்டும்! வேத வசனங்களை மனப்பாடம் செய்ய ஒரு விளக்க முறைக்கு செல்லவும் MemLok.com
பெருந்தோற்று காலங்களில் நம்பிக்கை
5 நாட்கள்
சமீபகாலமாக இதுவரை உலகம் பார்த்திராத ஒரு சூழ்நிலையில் இன்று நாம் கடந்து போய்கொண்டிருக்கிறோம். சர்வத்தையும் படைத்து ஆளுகிற ராஜாதி ராஜாவை அண்டிகொண்டால் பிழைத்துகொள்வோம் என்பதை சரித்திரமும் ஒத்துகொள்ளும். இப்படிப்பட்ட காரியங்கள் ஏன் சம்பவிக்கிறது, இந்த சூழ்நிலையில் தேவன் நமக்கு தரும் தீர்வு என்ன, மரணமானாலும் ஜீவனானாலும் அவைகளை குறித்த நமது நம்பிக்கை என்ன என்பதை குறித்து வேதம் நமக்கு என்ன கற்றுகொடுக்கிறது ஆகிய காரியங்களை குறித்து இந்த தியானத்திட்டதின் கீழ் நாம் படிக்க இருக்கிறோம்.
துக்கம்
5 நாட்கள்
துக்கத்தை தாங்கக்கூடாததாக உணரலாம். நல்ல மனப்பான்மை கொண்ட நண்பரும் உறவினரும் என்னதான் ஆறுதலும் உற்சாகமும் அளித்தாலும், நம்மை யாருமே புரிந்து கொள்ளாததாகவே நாம் உணர்வோம் - நாம் மட்டுமே தனியாக துக்கத்தில் உழல்வதைப் போல. இந்தத் திட்டத்தில், நீங்கள் கர்த்தர் அருளும் கண்ணோட்டத்தைக் கண்டுகொள்ள உதவும் ஆறுதலான வேத பகுதிகளை ஆராயலாம், உங்கள் மேல் நம் இரட்சகருடைய மிகுந்த கரிசனையை உணரலாம், உங்கள் வேதனையிலிருந்து விடுதலையையும் அனுபவிக்கலாம்.
தேவனுக்கு செவிக்கொடுத்தல்
7 நாட்கள்
ஏமி க்ரோஷெல் எழுதிய இந்த ஏழு நாள் வேதாகம திட்டம், நம் அன்பு பிதாவின் இருதயத்திலிருந்து நேராக உங்களுக்கு எழுதப்பட்டுருக்கிறது என்று நம்புகிறோம். அவர்களுடய ஜெபம், நீங்கள் எல்லா எதிர் சத்தங்களையும் தவிர்த்து அவரது குரலில் கவனம் செலுத்தி விழித்துக்கொள்வது எப்படி என்று கற்றுக்கொடுக்கிறது.
பளு அதிகம் இல்லாத பயணம் செய்
7 நாட்கள்
மும்முரமான கிறிஸ்துமஸ் காலத்தில், நம்மில் அநேகர் குடும்ப உறவுகள், பண பிரச்சனைகள், அவசர முடிவுகள் மற்றும் ஏமாற்றமளிக்கும் எதிர்பார்ப்புகளின் அழுத்தத்தை உணருகிறோம். ஆகவே தொடர்ந்து வாசியுங்கள். பொறுமையாக ஒரு மூச்சு விடுங்கள். இந்த 'Life Church' இன் வேதாகம திட்டத்தை வாசித்து தேவன் நாம் சுமக்க சொல்லாத அநேக பாரங்களை நாம் சுமந்து கொண்டிருப்பதை உணருங்கள். இந்த பாரங்களை இறக்கி வைத்துவிட்டால் என்ன? பளு அதிகம் இல்லாத பயணம் செயலாம்.
காணாமல் போன சமாதானம்
7 நாட்கள்
வாழ்க்கை வேதனையாக இருக்கும்போது அமைதியை அனுபவிப்பது உண்மையில் சாத்தியமா? குறுகிய பதில்: ஆம், ஆனால் நம்முடைய சொந்த சக்தியில் இல்லை. நம்மை வியப்பில் ஆழ்த்திய ஒரு வருடத்தில், நம்மில் பலருக்கு கேள்விகள் எழுகின்றன. இந்த 7-நாள் வேதாகம திட்டத்தில், பாஸ்டர் கிரேக் க்ரோஷலின் செய்தித் தொடருடன், நாம் அனைவரும் விரும்பும் காணாமல் போன அமைதியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதைக் கண்டுபிடிப்போம்.
கீழடக்கி வெல்லும் கலை
7 நாட்கள்
வாழ்க்கை தோல்விகள், இழப்புகள், ஏமாற்றங்கள் மற்றும் வலிகள் நிறைந்தது. இழப்பு, துக்கம் மற்றும் காயம் ஆகியவற்றை சமாளிக்க "கடக்கும் கலை" எனும் இந்த வாசிப்புத் திட்டம் உங்களுக்கு உதவும். இது உங்களை ஊக்கப்படுத்தாத அல்லது தடம் புரள வைக்கும் முடிவுகளை அனுமதிக்காமல் மறுப்பது பற்றியது. மாறாக, தேவன் அவற்றை ஆரம்பமாக மாற்றட்டும். வாழ்க்கை குழப்பமாகவும் கடினமாகவும் இருக்கும்போது, விட்டுவிடாதீர்கள். மேலானவைகளை, மேலானவரை நோக்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் கடினமான தருணம் அல்லது வேதனையான இழப்பு எதுவாக இருந்தாலும், தேவன் உங்களுடன் இருக்கிறார்.