இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 139:14
எனக்குத் தேவையான அனைத்தும்
3 நாட்கள்
தேவன் நமக்கு முன்பு சென்று நம்மை பின்னிருந்து பாதுகாத்திருக்கிறார். அவர் நம்முடைய யுத்தங்கள் அனைத்தையும் ஏற்கனவே கையாழ்ந்திருக்கிறார். நாம் காணக்கூடாதவைகளை சரிசெய்து இருக்கிறார். திடீர் திருப்பங்களை கண்டு அவர் அஞ்சுவதில்லை. இந்த 3 நாள் தியான பகுதி உன்னை உற்சாகப்படுத்தி தேவன் சரியான பங்கு மற்றும் சரியான அளவை உன் ஜீவியத்திற்கு கொடுக்கிறார் என்று உணர வைக்கும்.
திருமணத்திற்கு-முன் பாடநெறி
5 நாட்கள்
வலுவான திருமணங்கள் தானாகவே உருவாகாது. வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஆரோக்கியமான மற்றும் வலுவான திருமணத்தை உருவாக்க தேவையான அணுகுமுறைகள், மதிப்புகள் மற்றும் பழக்கங்களை நீங்கள் கண்டுபிடிக்கப் வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இந்த 5 நாள் திட்டமானது The Marriage புத்தகத்தின் ஆசிரியர்களான நிக்கி மற்றும் சிலா லீ ஆகியோரால் உருவாக்கப்பட்ட The Pre-Marriage பாடத்திட்டத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
எழும்பி பிரகாசி
5 நாட்கள்
மக்கள் பெரும்பாலும் “உங்கள் சுமைகளை தேவனிடம் கொடுக்கவும்” என்று கூறுகிறார்கள். நீங்கள் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீர்களா? உலகத்தின் பிரச்சினனைகள் மிகவும் கடுமையாக கருதப்படுகிறது. மற்றும் நீங்கள் இயேசுவின் ஒளியை ஒளிர விரும்பினாலும், தன்னை அப்படியாகவே ஒளியை காண நீங்கள் சிக்கலாக உள்ளீர்களா என்பதைக் கருத்தில் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆசீர்வாதம் நமது சொந்த உலகம் இருண்டமாக உணரப்பட்டாலும், இயேசுவுக்காக எவ்வாறு ஒளியாக ஆகலாம் என்பதைக் கையாள்கிறது.
வாழ்க்கை மாற்றப்பட்டது: அடையாளத்தைத் தழுவுதல்
6 நாட்கள்
நாம் யாராக இருக்க வேண்டும் என பல குரல்கள் சொல்கையில், நமது அடையாளத்தை குறித்து நாம் போராடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. தேவன் நமது வேலையை வைத்தோ, திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கொண்டோ, நமது தவறுகளைக் கொண்டோ நம்மை வரையறுக்க விரும்பவில்லை. நம் வாழ்வில் அவருடைய கருத்தே உயரிய அதிகாரம் இருக்க வேண்டும் என கர்த்தர் விரும்புகிறார். இந்த ஆறு நாள் திட்டம் வேதம் நீங்கள் யார் என்று சொல்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அதை தழுவிக் கொள்ளவும் உதவும்.
உங்கள் திருமண வாழ்க்கைக்குள் ஆத்மீய பேரார்வத்தை செலுத்துங்கள்.
7 நாட்கள்
கேரி தாமஸ் அவர்களின் புதிய புத்தகமாகிய "A Lifelong Love" லிருந்து எடுக்கப்பட்ட இவை திருமணத்தின் நித்திய நோக்கங்களைப் பற்றி பேசுகின்றன. மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உயிரை பரப்பும் ஒரு ஊக்கமூட்டும் உறவாக உங்கள் திருமண வாழ்வை அமைக்க நடைமுறை கலையை கற்றுக்கொள்ளுங்கள்.
கவலை பற்றி வேதம் சொல்லும் 7 விஷயங்கள்
7 நாட்கள்
ஒவ்வொரு நாளுக்கும் நம் வாழ்க்கையில் சிக்கலான புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு அற்புதமான புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த ஏழு நாள் தியானத்தில், YouVersion-இல் உள்ள ஊழியர்கள், இன்று நீங்கள் எதிர்கொள்ளும் எல்லாவற்றிற்கும் கடவுளின் வார்த்தையிலிருந்து உண்மைகளைப் பயன்படுத்த உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளின் தியானத்திலும், கடவுள் உங்களிடம் பேசுவதைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் வசன படம் இணைக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமான உறவுகள்
7 நாட்கள்
அவரோடு உறவாடுவதற்காகவே ஆண்டவர் மனிதனை படைத்தார். நாம் உறவுமுறைக்குள் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். நாம் ஆண்டவரிடமும், நம்மோடும் மற்றவர்களோடும் நன்மையான, உறுதியான உறவுகளில் இருக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் திட்டம். அதனால்தான் ஒவ்வொரு உறவிலும் இடைவிடாத முயற்சியும் கவனமும் தேவை. உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றியும் அதில் விரிசல்கள் வராமல் காத்துக்கொள்வது எப்படி என்பதை பற்றியும் ஆண்டவர் அவர் வார்த்தையின் வழியாக என்னோடு பேசியதை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
ஆண்டவரின் சமாதானம்
7 நாட்கள்
சில சமயங்களில், நாம் இனி ஒருபோதும் சமாதானத்துடன் வாழ முடியாதபடிக்கு, இந்த உலகத்தின் சத்தங்களால் மிகவும் நெருக்கப்படுகிறோம். நம் சமூகத்தின் சலசலப்பு மற்றும் சந்தடியால் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போராடுவது போல் இருக்கிறது... இந்தக் கடினமான காலங்களில், இயேசு நம்மிடம் பேசி, "அமைதி, நான் இங்கே இருக்கிறேன், கவலைப்பட வேண்டாம்" என்று சொல்கிறார். இந்த திட்டத்தின் வழியாய் ஆண்டவர் உங்களிடம் பேசி அவருடைய பரிபூரண ஷாலோமை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி உங்களை ஆசீர்வதிப்பாராக!
சமாதானத்தை கண்டுக்கொள்வோம்
10 நாட்கள்
உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். டாக்டர். ஜான் ஸ்டான்லியுடன் இணைந்து வாழ்க்கையை மாற்றக்கூடிய மன அமைதிக்கான வழிகளை கண்டடையுங்கள், கடந்த கால வருத்தங்களை சரிசெய்ய உதவும் கருவிகளை பெற்றுக்கொள்ளுங்கள், தற்போதைய கவலைகளை சந்திக்கவும் எதிர் காலத்தைக் குறித்த பயங்களை நீக்கவும் கற்றுக்கொள்ளுங்கள்.