இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஏசாயா 41:10
பாதுகாப்பாக இருப்பது போதும் என்ற மனம் வேண்டாம்
3 நாட்கள்
பாதுகாப்பின்மை, சந்தேகம் மற்றும் பயம் ஆகியவற்றின் குரல்கள் எதிர்கொள்ளப்படாவிட்டால், அவை உங்கள் வாழ்க்கையை ஆணையிடும். இந்த குரல்களை நீங்கள் மௌனமாக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது. இந்த 3-நாள் வாசிப்புத் திட்டத்தில், சாரா ஜேக்ஸ் ராபர்ட்ஸ் உங்கள் கடந்த கால வரம்புகளை எவ்வாறு மீறுவது மற்றும் தடுக்க முடியாததாக மாறுவதற்கு சங்கடமானவற்றை எவ்வாறு தழுவுவது என்பதைக் காட்டுகிறது.
Walk with Jesus - பயப்படாதே !
4 நாட்கள்
இன்றைய சூழ்நிலையில் நீங்கள் எதிர்காலம், வியாதி, கடன் பிரட்சனை போன்ற காரியங்களினால் பயத்தோடு காணப்படலாம். ஆனால் எல்லா பயத்தையும் நீக்கி, " பயப்படாதே! நான் உன்னோடு இருக்கிறேன் " என்று சொல்லும் கர்த்தராகிய இயேசு உங்களோடு உண்டு !
நிச்சயமற்ற காலங்களில் உறுதி
5 நாட்கள்
நிச்சயமற்ற நிலைமைகளிலும், நிச்சயமானவராய் இருக்கும் தேவன்! நாம் சகோதரர் டேவிட் வில்லா அவர்களுடன் இணைந்து இந்த சமீபத்திய திட்டத்தை நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர் மறையைக் கடந்து மிகவும் பெரிய சிறப்பான ஒன்றை அடைவதற்காக தியானிக்க இருக்கிறோம்.
உனக்காக ஆண்டவரின் 7 வாக்குத்தத்தங்கள்
7 நாட்கள்
ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் யாவும் உனக்கு மெய்யாகவே நிறைவேறுமா என்று நீ எப்போதாவது சிந்தித்ததுண்டா? ஆம்! ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நித்தியமானவை, உன் எல்லா சூழ்நிலைகளிலும் உனக்கு அவைகள் உண்மையானதாகவே இருக்கும். நீ ஆண்டவரை விசுவாசித்து, தினமும் அவருடன் நடக்கும்போது, அவர் உனக்காக வைத்திருக்கும் 7 வாக்குத்தத்தங்களையும் எப்படி பெற்றுக்கொள்வாய் என்பதை பற்றியதே இந்த வாசிப்பு திட்டம்.
வாழ்க்கையின் புயல்களில் தேவனின் சத்தியத்தை கண்டுபிடித்தல்
10 நாட்கள்
கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகின் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க படுவதில்லை. உண்மையில், பிரச்சனைகள் வரும் என்று யோவான் 16:33 உறுதியளிக்கிறது. நீங்கள் இப்போது வாழ்க்கையின் புயல்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இந்த தியானம் உங்களுக்கானது. வாழ்க்கையின் புயல்களினுடாய் நமக்கு கிடைக்கும் நம்பிக்கையின் நினைவூட்டல் இது. இப்பொழுது நீங்கள் எந்தப் போராட்டத்தையும் எதிர்கொள்ளவில்லை என்றால், எதிர்காலத்தில் வரும் சோதனைகளில் உங்களுக்கு உதவும் அடித்தளத்தை அது உங்களுக்கு வழங்கும்.