இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யாத்திராகமம் 20:8
அமைதியின்மை
3 நாட்கள்
"உம்மிடத்திலே அமைதியை கண்டறியும் வரை எங்களுடைய இருதயம் ஓய்வடையாது" இந்த பிரபலமான வாக்கியத்தின் மூலம் நம்மில் அநேகர் உணரும் அமைதியின்மையை அகஸ்டின் வருணித்திருக்கிறார். ஆனால் உண்மையான அமைதியின்மைக்கு தீர்வு என்ன? இந்த மூன்று நாள் திட்டம், பண்டைய காலத்து ஓய்வுநாளை வேறு கோணத்தில் காண்பதன் மூலம் ஓரளவு தீர்வை காணலாம் - "அவர்" மூலமாக - இயேசு - நம்முடைய சமாதான காரணர்.
எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம்
5 நாட்கள்
இது சந்தோஷமாக இருக்கவேண்டிய காலம், கூடவே மிகவும் மும்முரமாக இருக்கக்கூடிய காலமும்கூட. இந்த கிறிஸ்துமஸ் காலத்தின் சந்தோஷத்தை அனுபவிக்க கொஞ்சம் நேரம் அமைதி மற்றும் ஆராதனைக்காக உங்கள் மும்முரமான வாழ்க்கையை விட்டு வெளியே வாருங்கள். இயேசுவின் பெயரை புரிந்துகொள்ள, என்ற புத்தகத்தை சார்ந்து, இந்த 5 நாள் தியானம் இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உங்களுக்கு இயேசுவின் நன்மையை அறிந்து, உங்கள் தேவையை புரிந்துகொண்டு, அவருடைய அமைதி மற்றும் உண்மைத்தன்மையை நாட உதவும்.
தெளிவாக சிந்திக்க போதுமான இடம்
5 நாட்கள்
எல்லாவற்றையுமே செய்ய வேண்டுமென்று முயற்சிக்கும் காரணத்தால், எந்த விஷயத்திலும் விருப்பம் இல்லாதது போல நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா? இந்த வாழ்க்கைப் பயணத்தில் விரும்பியவருடன் பற்பலவற்றை ஒரேநேரத்தில் செய்கிறோம். . .நீங்கள் திறமையாளர்தான். ஆனால் சோர்வடைந்துவிடுகிறீர்கள். அத்தகைய நேரத்தில் காற்றோட்டமான ஒரு அறை உங்களுக்கு சிறிது தேவைப்படும். ஒரு சாதாரணமான ஆனால் ஆச்சரியமான வரவேற்பின் மூலம், கர்த்தர் உங்களுடைய அதிவேகத்தை சமாதானம் நிறைந்த ஒன்றால் இறுதியாக மாற்றியமைக்க வழிவகை வழங்குகிறார். இந்த திட்டம் அதை எப்படியென காண்பிக்கும்.
பந்தயத்தில் ஓடுதல்: சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு ஊக்கமளிக்கும் 5 நாட்கள்
5 நாட்கள்
இந்த ஐந்து நாள் திட்டமானது, ஜெயிப்பது, மனத்தாழ்மையைக் கண்டறிதல், வாழ்க்கை பந்தயத்தை நடத்துவது போன்ற கதைகளுடன் உங்களை ஊக்குவிக்கவும். குறிப்பாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்காக உருவாக்கப்பட்ட இந்த குறுகிய தியானம், நீங்கள் ஓடும் பந்தயத்தைப் பற்றி சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறது, மேலும் புதிய கண்ணோட்டத்தில் விஷயங்களைக் காண உங்களுக்கு உதவும்.
ஒய்வு நாள் - தேவனின் தாளத்தின்படி வாழ்வது
8 நாட்கள்
இவாஞ்சலிகல் அலையன்ஸ் வீக் ஆஃப் பிரேயர் (WOP) என்பது ஐரோப்பிய சுவிசேஷக் கூட்டணியால் வழங்கப்பட்ட உள்ளடக்கத்துடன் உலகளாவிய ஆனால் பெரும்பாலும் ஐரோப்பா முழுவதும் அனுசரிக்கப்படும் முயற்சியாகும். WOP 2022 "ஒய்வு" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகிறது. எட்டு நாட்கள் முழுவதும் வாசகர்கள் ஓய்வின் ஒரு அம்சத்தில் கவனம் செலுத்த அழைக்கப்படுகிறார்கள்: அடையாளம், ஏற்பாடு, ஓய்வு, இரக்கம், நினைவு, மகிழ்ச்சி, பெருந்தன்மை மற்றும் நம்பிக்கை. தேவனின் தாளத்தின்படி ஒரு வாழ்க்கையை (மீண்டும்) கண்டறிய இந்த பொருள் உங்களுக்கு உதவும் என்று நாங்கள் ஜெபம் செய்கிறோம்!