இரட்சிப்புSample
இரட்சிப்பின் வழி
“ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.” எபிரேயர் 2 : 16
ஆதி மனிதன் பாவம் செய்ததினாலே பாவம் உலகில் பிரவேசித்தது. பாவத்துக்கு பரிகாரம் வேண்டப்பட்டது. தோட்டத்திலே பரிகாரம் அறிவிக்கப்பட்டது. ஸ்தீரியின் வித்து பிசாசின் தலையை நசுக்குமென்ற தீர்க்க உரை தெரிவிக்கப்பட்டது. கடவுள் இரட்சிப்பின் வழியை தேவ தூதர்கள் மூலமாக செய்யாமல் மனிதனின் வம்சத்திலே இதை செய்ய திட்டமிட்டார். வந்து போய் பணிவிடை செய்து திரும்பும் தூதர்களுக்கு இச்சிலாக்கியம் கிட்டவில்லை. மாறாக கடவுள் மனிதர்களின் மத்தியில் தோன்றி செயல் திட்டத்தை துவக்கினார். ஆபிரகாமை அழைத்து “ நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் “ என வாக்குத்தத்தம் அருளினார். ஆபிரகாம் விசுவாசித்தான் அவனுடைய விசுவாசமே நீதியெனப்பட்டது. விசுவாச சந்ததியும் பெருகினது. ஆபிரகாம் மூலம் தேசங்கள் உருவாயின.ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பனானார். விசுவாசத்தைக் கொண்டே இரட்சிப்பின் திட்டத்தை கொண்ட ஆண்டவர் விசுவாச சந்ததியை ஆசீர்வதித்தார். சரித்திரத்தின் நடுவிலே ஆபிரகாமின் ஆண்டவரே என அழைக்கும் விசுவாச சந்ததியாரும், ஈசாக்கின் ஆண்டவரே என சொல்லும் கீழ்ப்படிதலின் ஜனத்திரளும்,யாக்கோபின் ஆண்டவரே என கூறும் கடவுளை அனுபவமாக்குகிற மக்களும் சந்ததியாயின. தீர்கன் மூலமும் நியாயாதிபதியின் மூலமும் இராஜாக்கள் மூலமும் பங்கு பங்காக தன்னை இந்த சந்ததியாருக்கு வெளிப்படுத்தி தாவீதின் வம்சத்தை இரட்சிப்பின் வழியாக்கினார். அந்த சந்ததியில் முன் குறித்து, முன்னுரைத்து மனிதர்களின் மத்தியில் வாசம் பண்ணி மனிதருக்கு இரட்சிப்பின் தர்மத்தை இயேசுகிறிஸ்துவில் நிறை வேற்றினார். அவரை மனிதனாக்கி வெறுமையாக்கினதினாலே தாவீதின் குமாரன் என அழைக்கப்பட்டார். மேசியா என்றும் சொன்னார்கள். அபிஷேகிக்கப்பட்டவரெனவும் வெளிப்படுத்தப்பட்டார். பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பாரென இயேசு என பெயர் பெற்றார். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்களென விசுவாசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கிரியையினால் அல்ல. விசுவாசத்தினாலே இரட்சிப்பு கிருபையாக அளிக்கப்பட்டது. ஆபிரகாமின் பிள்ளைகளாக இன்றளவும் ஆபிரகாமை விசுவாசிகளின் தந்தையாகக் கொண்டு விசுவாச உலகில் கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்பை வம்ச வழி பட்டியலிட்டு வேதம் நமகு கற்று கொடுத்தது. மண்ணில் கால்பதித்தவர் இயேசுகிறிஸ்து வேதாகம மனிதர் வம்சவழி வந்தவர். கால் பதிக்காத பதிக்க முடியாத தூதர்களை கடவுள் பயன் படுத்தாமல் ஆபிரகாமின் வம்ச வழியை தெரிந்து மனுஷகுமாரன் மூலம் மனுக்குலத்தை இரட்சித்தார்.
இரட்சிப்பின் ஸ்திரத்தன்மை
அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார் . எபிரேயர் 2 ; 17, 18
இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே இலவசமாககிடைத்த இந்த இரட்சிப்பை காத்துக் கொள்ள வேண்டிய நமது பொறுப்பு. இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள். இரட்சிப்பில் கடவுளது பங்கும் நமது பங்கும் உண்டு. விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பை அடைகிறோம். ஒரு நாளில் நடந்து முடியும் ஒன்றல்ல, ஸ்திரத்தன்மை அவசியம். பிசாசையும் உலகத்தையும் பாவத்தையும் வெறுக்கிறேன் என நிலைபாட்டில் நிறைந்த அர்ப்பணிப்பு அவசியம், எவனை விழுங்கலாமென சுற்றித்திரிகிற எதிரியானவனுடைய வலையில் சிக்கிக் கொள்ளாமல் விழிப்புணர்வும் எச்சரிப்பும் தேவை. உண்மையாயிருக்க முடியவில்லையே என அங்கலாய்ப்பின் நேரங்கள் வரும் பாவங்களுக்குத் தக்க என்னை தண்டியாதேயுமென அறிக்கை செய்து இரக்கங்களுக்கு மன்றாடும் நேரம் எடுத்து கொள்ள வேண்டும். பாவத்தின் விளைவில் இருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். பாவ பிரசன்னம் உலகில் உண்டு.தொடாதே ருசிபாராதே என்ற காரியங்களில் கவனமாயிருக்க வேண்டும். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்போதோ அவரது விலையேறப் பெற்ற இரத்தத்தினால் சமீபமானோம். இனிதொடர்புகளில் உறவுகளில் எச்சரிப்போடு வாழும்போது ஸ்திரத்தன்மையுடன் இருப்போம். விலக்கி வைத்தவைகளில், விலகி நிற்பவைகளில் அர்ப்பணிப்புடன் அந்த எல்லைகளுக்கு விலகிஓட வேண்டும். ஆண்டவர் இந்த உடன்படிக்கையில் உண்மையுள்ளவராயிருக்கிறார். அதுபோல நாமும் உண்மையுள்ளவர் களாயிருக்க வேண்டும். அவர் நம்மை கை விடுவதில்லை நமக்காக பரிந்து பேசுகிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு பெலவீனத்தில் பெலன் கேட்டு ஜெபிக்க வேண்டும். பெலப்படுத்துவர். ஸ்திரப்படுத்துவார். பாவ பிரசன்ன வாழ்வில் பாவக்கறை படாதபடி நம்மை விலக்கி பாவத்துக்கு சோதனைக்கு தப்பிப் போக வழியும் உண்டு பண்ணுவார். தெரிந்த தெரிந்தெடுப்பில் நாம் உறுதியோடு இருக்கும் போது அவரும் தெரிந்து கொண்டவர்கள் விஷயத்தில் நன்மைக்காக செயல்படுவார்.சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். தேவன் ஒருவரே மத்தியஸ்தரும் ஒருவரே. அவரது இரக்கங்களுக்கு முடிவில்லை. இரக்கமுள்ள சந்நிதானத்துக்கு களைப்படையாமல் அனுதினமும் தைரியமாய் கிட்டிச்சேர்ந்து இரட்சிப்பின் ஸ்திரத்தன்மையை உணர வேண்டும். இரக்கம் பெறுவோம். சோர்ந்து போகிறவர்களுக்கு சத்துவம் அளிப்பவர் அவரே. அவரது கிருபை வரமோ நித்திய ஜீவன். ஏற்ற நேரத்தில் சகாயம் கிடைகும் அவரது சமூகத்தை நாடுவோம். இரட்சிப்பு கர்த்தருடையது. ஆமென்.
Scripture
About this Plan
இரட்சிப்பு மனுக்குலம் முழுவதும் முழு ஏக்கத்தோடு வேண்டிநிற்பது இரட்சிப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையிலும் இரட்சிப்பு தேவை. கடின உழைப்போடு பல கஷ்டங்கள் பிரயாசங்கள் ஏற்று மனிதன் இந்த இரட்சிப்புக்காக பல திசை நோக்கி இடம் நோக்கி புண்ணிய ஸ்தலம் நோக்கி அலைந்து திரிகிறான். மனிதன் கடவுளை அடைய விரும்புகிறான் ஆனால் கடவுளோ மனிதனை தேடி சிலுவையில் வந்து தனது இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டாரென்ற இந்த உண்மையே இரட்சிப்பின் அடிப்படை. இயேசுகிறிஸ்து எனது பாவங்களுக்காக மரித்தாரென ஒப்புக்கொண்டு விசுவாசத்தோடு அவரது இரத்தத்தினால் தன்னை கழுவி சுத்திகரித்துக்கொள்வதே இரட்சிப்பு. இது இன்றைக்கே சொந்தமாக வேண்டியது. என்றைக்கும் நிலைத்து நிற்பது. இது இலவசமானது உண்மையான மனந்திரும்புதலை கொண்டு இலவசமான இந்த பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வதே இரட்சிப்பு. இன்றே இரட்சிப்பின் நாள். இதை அனுபவமாக்க வேண்டும்.
More