அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?Sample
![அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F37201%2F1280x720.jpg&w=3840&q=75)
நீ மன அழுத்தத்தில் இருக்கிறாயா?
ஒரு வாசகர் தனது கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டார்: "என்னால் என் மன அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை - வேறு வார்த்தைகளில் சொன்னால், நான் ஒரு சோதனையை எதிர்கொள்ளும்போது, எனக்குள் அழுத்தம் ஏற்படுகிறது, இது சில நேரங்களில் என்னைச் சுற்றியுள்ளவர்களை பாதிக்கிறது."
விருப்பத்திற்கு மாறாக, இந்த கருத்து ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. ஒரு வீட்டை நிர்வகிப்பது அல்லது முக்கியமான அலுவலக பொறுப்புகளை நிறைவேற்றுவது மற்றும் ஆண்டவரை சேவிப்பதற்கான அழுத்தமும் கூட நமக்கு மன உளைச்சல் உண்டாக்கி தத்தளிக்க வைக்கலாம்.
மன அழுத்தம் நம்மை உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் காயப்படுத்துகிறது. ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இது நம்மை காயப்படுத்துகிறது, எப்படியென்றால் நம் வாழ்வில் இருக்கும் வெளிப்புற அழுத்தங்கள் நமக்கு உள்ளாக இருக்கும் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பாதிக்க அனுமதிக்கிறது.
மன அழுத்தம் ஒரு திருடன், தன்னால் முடிந்த அனைத்தையும் திருடும்! உடல்நலம், சமாதானம், ஓய்வு, உறவுகள், சிரிப்பு - மன அழுத்தம் என்பது இயேசு தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் நமக்குக் கொடுத்த திரளான ஜீவனை அனுபவிப்பதைத் தடுக்க எதிரி பயன்படுத்தும் ஒரு கொடிய கருவியாகும்.
உன்னுடைய சூழ்நிலை என்ன? நீ அழுத்தத்தில் இருக்கிறாயா? மன உளைச்சலில் இருக்கிறாயா? நான் உன்னை ஊக்குவிக் விரும்புகிறேன் : நீ மன அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பதால், உன்னிடம் ஏதோ தவறு இருப்பதாக அர்த்தம் இல்லை. நீ ஒரு இயல்பான மனிதர் என்று தான் அர்த்தம்.
இருப்பினும், இன்று உனக்கு சில நல்ல செய்திகள் இங்கே உண்டு : நீ உலகில் உள்ள மற்றவர்களைப்போல் வாழ வேண்டியதில்லை. ஒரு விசுவாசியாக, நீ ஆண்டவரின் வாக்குறுதிகளை நம்பலாம் மற்றும் அவர் உன்னில் அவருடைய அசாதாரண திட்டத்தை நிறைவேற்றுகிறார் என்றும் நம்பலாம்!
வேதாகமம் இவ்வாறு அறிக்கையிடுகிறது : “ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.” (சங்கீதம் 16:11)
ஆண்டவர் உனக்காக நிறைவான வாழ்க்கையை வைத்திருக்கிறார்! ஜீவனும் மகிழ்ச்சியும் அவருடைய பிரசன்னத்தில் காணப்படுகின்றன! ஏன் இப்போதே சிறிது நேரம் ஒதுக்கி தந்தையின் பாதத்தில் செலவிடக்கூடாது? அவருடைய ஆசீர்வாதத்திலும் பிரசன்னதிலும் நிறைந்திரு!
இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்: https://tamil.jesus.net/
Scripture
About this Plan
![அழுத்தத்தை (stress-ஐ) எப்படி மேற்கொள்வது?](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F37201%2F1280x720.jpg&w=3840&q=75)
பல பொறுப்புகளின் மத்தியில் தத்தளித்து கொண்டிருக்கிறாயா? குடும்ப பாரம், வேலை பாரம், சமுதாய பாரம் என்று பலவிதமான பாரங்கள் உன்னை அழுத்துகிறதா? எல்லா பாரங்களும் பிரச்சனைகளும் உன்னை அநேக சிந்தனைகளில் ஆழ்த்துகிறதா? எதை செய்யவேண்டுமென்று தெரியாத குழப்பமா? நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு தருணத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையை கடந்து செல்கிறோம். ஆண்டவர் இயேசு இதற்கான பதில்களையும் இதுபோன்ற மன உளைச்சலில் இருந்து விடுபட்டு மீண்டும் நாம் விழாமல் எப்படி காத்துக்கொள்வது என்பது பற்றியும் வேதாகமத்தின் மூலம் நம்மிடம் பேசியுள்ளார். இதையே நாம் இந்த திட்டத்தில் கண்டறியப்போகிறோம்.
More
Related Plans
![Play-by-Play: John (3/3)](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55369%2F320x180.jpg&w=640&q=75)
Play-by-Play: John (3/3)
![Live Well](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55107%2F320x180.jpg&w=640&q=75)
Live Well
![All Who Are Weary: God Is Faithful](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54872%2F320x180.jpg&w=640&q=75)
All Who Are Weary: God Is Faithful
![Philippians](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54646%2F320x180.jpg&w=640&q=75)
Philippians
![3-Day Bible Plan: How to Truly Love Thy Neighbor in Today’s World](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55370%2F320x180.jpg&w=640&q=75)
3-Day Bible Plan: How to Truly Love Thy Neighbor in Today’s World
![GLEANINGS - Numbers](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55032%2F320x180.jpg&w=640&q=75)
GLEANINGS - Numbers
![Building Wealth & Stewardship in the Church](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54598%2F320x180.jpg&w=640&q=75)
Building Wealth & Stewardship in the Church
![Reflections of Faith and Justice - a Devotional by Benjamin Mays](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55146%2F320x180.jpg&w=640&q=75)
Reflections of Faith and Justice - a Devotional by Benjamin Mays
![Come Up Higher: A Call to Deeper Fellowship and Purpose](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54530%2F320x180.jpg&w=640&q=75)
Come Up Higher: A Call to Deeper Fellowship and Purpose
![3-Day Bible Quest: Level 2: Love Unlocked – Powering Up Through Jesus](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55368%2F320x180.jpg&w=640&q=75)