YouVersion Logo
Search Icon

Plan Info

ஏன் வலி?Sample

ஏன் வலி?

DAY 1 OF 3

வலி மற்றும் நீங்கள்

நாம் ஏன் வலியை அனுபவிக்க வேண்டும்? கடவுள் ஏன் முதலில் அதை அனுமதிக்கிறார்? இதற்கு நான் என்ன செய்தேன்? ஏன்? ஏன்? ஏன்? இதற்கான பதில் உங்களை ஆச்சரியப்படுத்தும். மகத்துவத்திற்கு உங்களை தயார்படுத்த கடவுள் வலியைப் பயன்படுத்துகிறார். தங்கம் எப்படி விலைமதிப்பற்றதாகவும் தரம்மிக்கதாகவும் மாறுகிறது? அது சூடான, எரியும் நெருப்பால் சுத்திகரிக்கப்படும் போது தான். தங்கத்தை சூடாக்காமல் அதை சுத்திகரிக்க முடியாது. ஆனால் அது எரியும் செயல்முறையிலிருந்து வெளியே வரும்போது, அதன் தூய்மையான வடிவில் அதைப் பெறுகிறோம். சுத்த தங்கத்தை நெருப்பில் புடமிடாமல் பெற முடியாது. அவ்வாறே, கடவுள் நம் வாழ்வில் வலியை (நெருப்பு) பயன்படுத்தி நம்மை மதிப்புமிக்க (தரம்வாய்ந்த) மனிதர்களாக்குகிறார்.

வலி தவிர்க்க முடியாதது மற்றும் யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது. துன்பப்படுபவன் அதை தனியே தாங்க வேண்டும். இது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் மற்றும் தவிர்க்க முடியாது. இருப்பினும், அதனுடன் எப்படி வாழ வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும், அதன் மூலம் வெற்றி பெற வேண்டும்.

நோய் என்பது எனக்கு புதிதல்ல, ஏனென்றால் என் வாழ்நாளில் 70 சதவீதத்தை மருத்துவமனைகளில் கழித்தேன். எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று யோசித்தேன். இவ்வாறு விதவிதமான கேள்விகள் எழுந்தன. கடவுள் என் மீது கோபமாக இருப்பதாகவும், அவர் எனக்கு பாடம் கற்பிக்கிறார் என்றும் மக்களால் நான் மதிப்பிடப்பட்டது மிகவும் வேதனையான விஷயம். நான் பாவத்தில் வாழ்கிறேன் என்று முடிவு செய்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கண்டிக்கப்பட்டதாக நபராக உணர்ந்தேன். ஆனால் நான் வேதவாக்கியங்களைப் படிக்க ஆரம்பித்தபோது, முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கண்டேன். கடவுள் நம்மை அழிக்க வலியின் வழியாக செல்ல அனுமதிக்கவில்லை என்ற நம்பிக்கையும் புரிதலும் எனக்கு கிடைத்தது. மாறாக, பெரிய விஷயத்திற்கு நம்மை தயார்படுத்துவதாக இருந்தது.

நல்ல உடல்அமைப்பை பெற வேண்டும் என்று கனவு காணும் ஒருவர் உடற்பயிற்சியின் வலியை ஏற்கவில்லை என்றால் தனது இலக்கை அடையவே முடியாது. அதே வழியில், கடவுள் வலியை அனுமதித்து உங்களை வடிவமைக்கவும், பயிற்றுவிக்கவும் முற்படுகிறார், எனவே நீங்கள் ஒரு பயனுள்ள பாத்திரமாக மாறலாம்.

குயவன் தரையில் குவிக்கப்பட்ட வடிவமற்ற களிமண் குவியல்களிலிருந்து சாதாரண களிமண்ணின் ஒரு கட்டியைத் தேர்ந்தெடுக்கிறான். குயவன் ஒரு பொருளை இறுதியாக தன் மனதில் வைத்திருக்கிறான், அதுவே இறுதி நோக்கத்திற்குப் பயன்படும் ஒரு பாத்திரம். எனவே களிமண் குயவனுக்கு ஒத்துழைக்கிறது மற்றும் வலியைக் கடந்து செல்கிறது, குயவன் எதைச் செய்தாலும் அது அவனுக்கு மதிப்பைக் கொடுக்கும். அதுபோல நாமும் கடவுளோடு ஒத்துழைக்க வேண்டும். வலியைத் தவிர்த்தால் எதையும் சாதிக்க இயலாது; அது உங்களை ஒரு ஆணாகவோ பெண்ணாகவோ சமரசம் செய்யும், ஆனால் கடவுளின் ராஜ்யத்தில் உங்களுக்கு இடமில்லை.

நினைவில் கொள்ளுங்கள், வலி என்பது அழிக்கப்படுவதற்காக அல்ல. மாறாக, அது உங்களில் கிறிஸ்துவைப் போன்ற ஒரு குணத்தை உருவாக்குகிறது, இது உங்கள் கடைசி மூச்சு வரை கிறிஸ்துவின் சாயலில் வளர உதவும். எனவே, உங்கள் வலியை ஏற்றுக்கொண்டு, நீங்கள் அதை கடந்து செல்லும்போது கடவுளை மகிமைப்படுத்துவீ ர்கள். வலி இல்லாமல் எந்த லாபமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Day 2

About this Plan

ஏன் வலி?

இன்று நீங்கள் போராடும் பகுதி, நாளை கடவுள் உங்களைப் பயன்படுத்துவார். மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் 10 நிமிடங்களுக்கு கடவுளுடனும் அவருடைய வார்த்தையுடனும், கடவுள் ஏன் நம் வாழ்வில் வலியையும் துன்பத்தையும் அனுமதிக்கிறார் எ...

More

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy