தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்Sample

அறிமுகம்
இந்த முழு வருடமும் கூட மங்கிப் போன, ஒரு மோசமான கனவாக அல்லது ஒரு தாளில் எழுதப்பட்டகிறுக்கலாகத் தோன்றலாம். கடந்த பதினோரு மாதங்கள் எப்படிப்பட்டவையாக இருந்தன என்பதையும் தாண்டி, கிறிஸ்மஸ் சத்தமில்லாமல் வந்துவிட்டது. உலகம் முழுவதிலும் கொண்டாட்டம் என்பதின் கருத்துக்கள்மாறிவிட்டன. அல்லது குறைந்த பட்சம் கொள்ளை நோயின் அச்சுறுத்தலின் காரணமாக இந்தக் கருத்துக்கள்நமக்குள் உருவாகியிருக்கலாம். அரசியலில் குழப்பங்கள், சுற்றுச் சூழலில் மாற்றங்கள் உருவாகியிருக்கின்றன. இம்மானுவேல் - தேவன் நம்மோடு என்பது அனைத்து மனித குலத்துக்கும் ஒரு பெரும் பரிசு ஆகும். இதற்கு முன்புஎந்தக் காலத்திலும் இருந்ததை விட இது இன்று மிகவும் உண்மையானதாக இருக்கின்றது. உறுதியற்ற இந்ததொடர்ச்சியான நிலையில் உறுதியாக இருப்பது கிறிஸ்துவும் அவரது படைப்புக்களின் மீது அவருக்கு இருக்கும்முடிவே இல்லாத அன்பும் தான். நமது பாடுகள், கவலை மற்றும் கேள்விகளின் நடுவிலும் கூட, அவர் இன்னும்தேவனாக இருக்கிறார். நம்முடன் நித்திய காலத்துக்கும் உடன் இருப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார்.
எத்தனை நம்பிக்கை!
எத்தனை மறு உறுதி!
எத்தனை ஆறுதல்!
இதில் சோகமானது என்னவென்றால், நாம் அனைவரும் நம் சொந்த வாழ்க்கைகளிலேயே சிக்கிக் கொண்டுநம்மை உருவாக்கியவரை விட்டு நாம் மெதுவாக விலகிக் கொண்டிருக்கிறோம். நாம் அரசியலைப் பற்றி, கலாச்சாரத்தைப் பற்றி, ஒழுக்கக் கேட்டைப் பற்றி, பயங்காட்டும் கொள்ளை நோயைப் பற்றி விவாதிக்கிறோம். ஆனால் இவை யாவும் நம்மை நமது முழங்காலில் நிற்கச் செய்து தேவனுக்கு அருகில் நெருங்கச் செய்யவில்லை. அப்படித் தான் செய்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஆகவே, இந்த அட்வெந்து என்னும் கிறிஸ்துபிறப்புக் காலத்தில், சமூக விலகல் மற்றும் தனித்திருக்கும் சூழலில் ஒரு கணமும் விட்டு விலகாமால் நம்முடன்இருக்கும் தேவனைப் பற்றி கொண்டாட சிறிது காலம் எடுத்துக் கொள்வோம். நம் தீமைக்கு அல்லநன்மைக்காகவே நம்மைப் பற்றி திட்டங்கள் வைத்திருக்கிறார் என்பதை நாம் நினைவில் கொண்டு வருவோம். நம்பிக்கையையும், நாம் வாழ்கின்ற இந்த உடைந்து போன உலகத்தில் ஒரு சிறந்த எதிர்காலத்தை நமக்குக்கொடுப்பவர் அவர். இந்த தேவனுடனான நமது உறவை நாம் புதுப்பிப்போம். அவருக்கு ஜெபத்திலும் அவரதுவசனத்திலும் அதிக நேரத்தை அர்ப்பணித்து இதைச் செய்வோம். சிறிதாகவோ பெரிதாகவோ நாம் இருக்கும்உலகத்தில் வெளிச்சமாக இருப்பதன் மூலம் உலகத்தின் ஒளியாக வந்தவரைக் கொண்டாடுவோம்.
Scripture
About this Plan

சிறந்த காலங்களில் நம் உலகமானது உறுதி இல்லாத, தலைகீழானதாகத் தோன்றுகிறது. தேவ குமாரனாகிய இயேசு மட்டும் இல்லை என்றால், நமக்கு நம்பிக்கையே இருந்திருக்காது. ஒவ்வொரு கிறிஸ்து பிறப்புத் திருநாளும் - இம்மானுவேல் - தேவன் நம்முடன், என்னும் பரிசை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முடன் தேவன் இருக்கிறார் என்ற பரிசு தான் நமக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்போதில் இருந்து நித்திய காலம் வரை, நாம் ஒரு போதும் தனிமையாக இல்லை. இது கொண்டாடுவதற்கு ஏற்ற காரணம் தான்.
More
Related Plans

eKidz Devotional: All About Choices

Embracing Your Identity as a Daughter of the King Through Infertility

King of Kings: 5-Day Easter & Good Friday Study

The Strength of the Spirt

Heroes of the Faith, Part 7

The Adversity Gospel: Trading Prosperity Promises and Deep Disappointment for Unsinkable Hope

You Can!

Two-Year Chronological Bible Reading Plan (First Year-May)

Crushing Chaos
