உங்கள் வாழ்வின் மிகப் பெரிதான தீர்மானம்!Sample
“இரட்சிப்பு : தேவனுடைய பங்கும் உங்களது பங்கும்”
உங்களது இரட்சிப்பு இரண்டு முக்கியமான தீர்மானங்களை ஒன்றிணைக்கிறது. நமது ஒரே இரட்சகராக இயேசுகிறிஸ்துவை இவ்வுலகுக்கு அனுப்பும்படி தேவன் வெகுகாலத்திற்கு முன்னரே எடுத்துவிட்ட தீர்மானமே முதலாவது. உங்களது இரட்சகராக அவரது குமாரனை ஏற்றுக்கொள்ளும்படி நீங்கள் எடுத்த தீர்மானம் இரண்டாவது தீர்மானம்.
“கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;”-எபே.2:8-9
கிருபை என்பது நம் தகுதிக்கும் மீறிய, நாம் சம்பாதிக்கமுடியாத தயவு என்று அர்த்தப்படும். இந்தக்கிருபையே இரட்சிப்பில் தேவனுடைய பங்காகும்; இயேசு கிறிஸ்து என்னும் பூரணமான வெகுமதியின் மூலமாக மனுக்குலத்திற்கு தம்முடைய தயவை வெளிப்படுத்தியுள்ளார். நமது பாவங்களுக்கான தண்டனைக் கிரயத்தை இயேசு கிறிஸ்து சிலுவையில் முற்றிலுமாகச் செலுத்திவிட்டார். தேவகிருபையின் ரூபமாக வெளிப்பட்ட இயேசுவே என்றென்றும் நமது நற்கிரியைகளினால் செலுத்தித் தீர்க்கமுடியாத பாவப்பரிகாரத்தை செலுத்தினார். இந்த இரட்சிப்பை நாம் சம்பாதிக்க முடியாது. நாம் எந்த விலையுமே செலுத்தத் தேவையில்லாத, எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஈவு.
தொடமுடியாத, பார்க்கமுடியாத ஒன்றை இருக்கிறதாக நாம் நம்புவதே விசுவாசம். இரட்சிப்பில் நமது பங்கை ஆற்றுவதற்கு இந்த விசுவாசம் தேவையாயிருக்கிறது. நமது தீர்மானத்தின் வெளிப்பாடாகிய விசுவாசத்தின் மூலமாக இயேசுவை நந்து வாழ்வின் ஆண்டவராக ஏற்றுக்கொண்டு, நமது வாழ்வைத் தேவனுக்குச் சமர்ப்பிக்கத் தீர்மானிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் மூலமாகத் தேவனுடைய கிருபையை விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட நமக்கோ சந்தேகத்துக்கோ கேள்விக்கோ இடமின்றி பரலோகத்தில் தேவனோடு வாழும் நித்தியம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இந்த உண்மையைப்பற்றி நீங்கள் நூறு சதவீதம் உறுதியோடிருக்கலாம்.
இரட்சிப்பைச் சம்பாதிப்பதற்கு நமது நற்கிரியைகள் உதவாவிட்டாலும், இயேசுவை ஏற்றுக்கொண்டபின்பு வாழுகின்ற கிறிஸ்தவ வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்களிக்கிறது.
“ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.”-எபே.2:10
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஒரு பிரத்தியேகமான திட்டத்தைத் தேவன் வைத்துள்ளார்; உங்களது வாழ்வுக்கான திட்டத்தின் விவரம் உங்களுக்கும் தேவனுக்கும் மட்டுமே தெரியும். ஆனால், தேவன் அவரது பிள்ளைகள் அனைவருக்கும் பொதுவான திட்டம் ஒன்றை வைத்துள்ளார்; அது நமது நற்கிரியைகள் மூலமாக விசுவாசத்தைச் செயலில் காட்டுவதே. அவைகளைச்செய்யும்போது, நமது வாழ்வில் தேவன் வைத்துள்ள திட்டத்தின் முக்கிய பங்கை நாம் ஆற்றுவது மட்டுமல்லாது அவரது அன்பை மற்றவர்கள் முன்னால் பிரகாசிக்கச்செய்கிற பேறும் நமக்குக்கிடைக்கிறது. இரட்சிப்பு ஒரு புதிய துவக்கமும், நிறைவும் ஆகும்; அது நமது கொண்டாட்டத்துக்குரிய அனுபவம். நீங்கள் புதிய சிருஷ்டி; நிரந்தரமாய் மாறிவிட்டீர்கள்.
Scripture
About this Plan
நாம் எடுக்கும் அநேக தீர்மானங்கள், சில காரியங்களுக்கு முக்கியமானதாக இருக்கும். ஆயினும், ஒரே ஒரு தீர்மானம்தான் மிக முக்கியமானது. இந்த அசாதாரணமான, தேவனுடைய இலவசப் பரிசான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானத்தைப்பற்றிய ஆழமான புரிதலுக்கு ஓர் எளிய வழிகாட்டியைத் தேடிக் கொண்டிருப்பீர்களேயானால், இங்கே தொடங்குங்கள். – டேவிட் ஜே. ஸ்வாண்ட்’ எழுதிய “ இந்த உலகுக்கு வெளியே; வளர்ச்சிக்கும் இலக்குக்குமான ஒரு கிறிஸ்தவ வழிகாட்டி”
More