1
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:16
பரிசுத்த பைபிள்
“ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் குமாரனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர்.
Vergelijk
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 3:16
2
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:17
தேவன் தன் குமாரனை உலகிற்கு அனுப்பினார். உலகின் குற்றங்களை நியாயம் விசாரிக்க தனது குமாரனை அனுப்பவில்லை. இவ்வுலகம் தேவனுடைய குமாரனால் இரட்சிக்கப்படுவதற்கென்று தேவன் தன் குமாரனை அனுப்பினார்.
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 3:17
3
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:3
அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார்.
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 3:3
4
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:18
தேவகுமாரன் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. ஆனால், அவர் மீது நம்பிக்கைகொள்ளாதவர்கள் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டுவிட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுக்கு தேவனுடைய ஒரே குமாரன் மீது நம்பிக்கை இல்லை.
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 3:18
5
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:19
இந்த உலகத்துக்கு ஒளி (நன்மை) வந்திருக்கிறது. ஆனால் அந்த ஒளியை மக்கள் விரும்பவில்லை. அவர்கள் இருளை (பாவத்தை) விரும்பினார்கள். ஏனென்றால் அவர்கள் தீய செயல்களைச் செய்துகொண்டிருந்தார்கள். இந்த உண்மையை வைத்தே அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுகிறார்கள்.
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 3:19
6
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:30
இயேசு மேலும் பெருமை பெறவேண்டும். எனது முக்கியத்துவம் குறைந்துவிடவேண்டும்.
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 3:30
7
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:20
தீமைகளைச் செய்கிற ஒவ்வொரு மனிதனும் ஒளியை வெறுக்கிறான். அவன் வெளிச்சத்துக்குள் வரமாட்டான். ஏனென்றால் ஒளி அவன் செய்த தீமைகளை வெளிப்படுத்திக்காட்டும்.
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 3:20
8
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:36
இந்தக் குமாரனை நம்புகிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவர். ஆனால் அவருக்குக் கீழ்ப்படிய மறுக்கிற எவரும் அந்த வாழ்வை ஒருபோதும் பெற முடியாது. தேவனுடைய கோபம் அவர்கள் மேல் இருக்கும்” என்று யோவான் அவர்களுக்குக் கூறினான்.
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 3:36
9
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:14
“வனாந்தரத்தில் மோசே பாம்பினை உயர்த்திப் பிடித்தான். அவ்வாறே மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்.
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 3:14
10
யோவான் எழுதிய சுவிசேஷம் 3:35
பிதாவானவர் தன் குமாரனை நேசிக்கிறார். அவர் தன் குமாரனுக்கு அனைத்தின் மேலும் அதிகாரம் கொடுத்திருக்கிறார்.
Ontdek யோவான் எழுதிய சுவிசேஷம் 3:35
Thuisscherm
Bijbel
Leesplannen
Video's