யோவான் முன்னுரை

முன்னுரை
இந்த நற்செய்தி அப்போஸ்தலன் யோவானால் எழுதப்பட்டது. கிறிஸ்துவுக்கு பின் 90–96 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எபேசு பட்டணத்திலிருந்து இவர் இதை எழுதினார்.
இதை வாசிக்கிறவர்கள் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்படியாகவும், அவருடைய பெயரின் மூலமாக இறைவாழ்வைப் பெறும்படியாகவுமே இது இவரால் எழுதப்பட்டது.
இயேசு மனிதனாய் வருவதற்கு முன்பாகவும், அவர் பிதாவுடன் இறைவனாகவே இருந்தார் என்பதைக் குறிப்பிட்டே யோவான் தமது நற்செய்தியை ஆரம்பிக்கிறார். இயேசு ஒரு பெரும் மனிதர் மட்டுமல்ல, இறைவனாகவே இருந்தார் என்பதை அவர் எடுத்துக் காண்பிக்கிறார். மற்ற நற்செய்திகளில் கூறப்பட்டிராத இயேசுவின் பல அற்புதங்களையும் போதனைகளையும் இவர் விவரிக்கிறார்.

Highlight

Kongsi

Salin

None

Ingin menyimpan sorotan merentas semua peranti anda? Mendaftar atau log masuk