1
யோவான் 19:30
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இயேசு அந்த பானத்தை ஏற்றுக்கொண்ட பின்பு, “முடிந்தது” என்று சொன்னார். இதைச் சொன்னதும், அவர் தமது தலையைச் சாய்த்து இறுதி மூச்சை விட்டார்.
Bandingkan
Telusuri யோவான் 19:30
2
யோவான் 19:28
பின்பு, எல்லாம் முழுமையாக முடிந்து விட்டதென்று இயேசு அறிந்து, வேதவசனம் நிறைவேறும்படி, “நான் தாகமாய் இருக்கின்றேன்” என்றார்.
Telusuri யோவான் 19:28
3
யோவான் 19:26-27
தமது தாயும், தாம் நேசித்த சீடனும் அருகே நிற்பதை இயேசு கண்டபோது, அவர் தமது தாயிடம், “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்” என்றார். அந்தச் சீடனிடம், “இதோ உன் தாய்” என்றார். அந்த நேரத்திலிருந்து, இந்தச் சீடன் மரியாளைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டான்.
Telusuri யோவான் 19:26-27
4
யோவான் 19:33-34
ஆனால் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டார்கள். அதனால் அவர்கள் அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனாலும் அந்த இராணுவ வீரரில் ஒருவன் இயேசுவின் விலாவில் ஈட்டியினால் குத்தினான். அப்போது இரத்தமும் தண்ணீரும் உடனே வெளியே வந்தன.
Telusuri யோவான் 19:33-34
5
யோவான் 19:36-37
“அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கின்ற வேதவசனம் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தன. “தாங்கள் ஈட்டியினால் குத்தியவரை, அவர்கள் நோக்கிப் பார்ப்பார்கள்” என்று இன்னொரு வேதவசனமும் சொல்கின்றது.
Telusuri யோவான் 19:36-37
6
யோவான் 19:17
இயேசு தம்முடைய சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு, மண்டையோடு என்ற இடத்திற்குச் சென்றார். அந்த இடம் எபிரேய மொழியில், கொல்கொதா என அழைக்கப்பட்டது.
Telusuri யோவான் 19:17
7
யோவான் 19:2
இராணுவ வீரர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தை செய்து, அதை அவர் தலையில் வைத்தார்கள். அவர்கள் அவருக்கு கருஞ்சிவப்பு நிறத்தில் ஒரு மேலாடையை உடுத்தி
Telusuri யோவான் 19:2
Beranda
Alkitab
Rencana
Video