1
ஆதியாகமம் 32:28
பரிசுத்த பைபிள்
பிறகு அந்த மனிதர், “உன் பெயர் இனி யாக்கோபு அல்ல. உன் பெயர் இஸ்ரவேல். நீ தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டபடியால் நான் உனக்கு இந்தப் பெயரை வைக்கிறேன். உன்னைத் தோற்கடிக்க மனிதர்களால் முடியாது” என்றார்.
Համեմատել
Ուսումնասիրեք ஆதியாகமம் 32:28
2
ஆதியாகமம் 32:26
அந்த மனிதர் யாக்கோபிடம், “என்னைப் போக விடுகிறாயா? சூரியன் உதித்துவிட்டது” என்று கேட்டார். அதற்கு யாக்கோபு, “நான் உம்மைப் போகவிடமாட்டேன். நீர் என்னை ஆசீர்வதித்தே ஆக வேண்டும்” என்றான்.
Ուսումնասիրեք ஆதியாகமம் 32:26
3
ஆதியாகமம் 32:24
யாக்கோபு ஆற்றைக் கடந்தவர்களில் கடைசி நபர். அவன் ஆற்றைக் கடக்குமுன், தனியாக நிற்கும்போது தேவதூதனைப் போன்ற ஒருவர் வந்து அவனோடு போராடினார். சூரியன் உதயமாகும் வரைக்கும் அவர் போராடியும்
Ուսումնասիրեք ஆதியாகமம் 32:24
4
ஆதியாகமம் 32:30
எனவே, யாக்கோபு அந்த இடத்திற்கு பெனியேல் என்று பெயர் வைத்தான். “இந்த இடத்தில் நான் தேவனை முகமுகமாய்ப் பார்த்தேன். உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்றான்.
Ուսումնասիրեք ஆதியாகமம் 32:30
5
ஆதியாகமம் 32:25
அந்த மனிதரை யாக்கோபு விடுவதாயில்லை. எனவே, அவர் யாக்கோபின் தொடையைத் தொட்டார். அப்போது யாக்கோபின் கால் சுளுக்கிக்கொண்டது.
Ուսումնասիրեք ஆதியாகமம் 32:25
6
ஆதியாகமம் 32:27
அந்த மனிதர், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அவன், “என் பெயர் யாக்கோபு” என்றான்.
Ուսումնասիրեք ஆதியாகமம் 32:27
7
ஆதியாகமம் 32:29
யாக்கோபு அவரிடம், “உமது பெயரைத் தயவு செய்து சொல்லும்” என்றான். ஆனால் அவர், “என் பெயரை ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டார். அதே சமயத்தில் அவர் யாக்கோபை ஆசீர்வதித்தார்.
Ուսումնասիրեք ஆதியாகமம் 32:29
8
ஆதியாகமம் 32:10
என் மீது நீர் வைத்த மிகுதியான கருணைக்கும் நன்மைகளுக்கும் நான் தகுதியுடையவனில்லை. நான் யோர்தான் ஆற்றை முதல் முறையாகக் கடந்து சென்றபோது, என்னிடம் எதுவுமில்லை. ஒரு கைத்தடி மட்டுமே இருந்தது. இப்போது என்னிடம் இரு குழுக்களாகப் பிரிக்கும் அளவிற்கு எல்லாம் உள்ளது.
Ուսումնասիրեք ஆதியாகமம் 32:10
9
ஆதியாகமம் 32:32
எனவே, இன்னும் இஸ்ரவேல் ஜனங்கள் தொடைச் சந்து தசையை உண்பதில்லை. ஏனென்றால் அது தேவன் யாக்கோபின் தொடைச் சந்து தசையைத் தொட்ட இடம் ஆகும்.
Ուսումնասիրեք ஆதியாகமம் 32:32
10
ஆதியாகமம் 32:9
“என் தந்தையாகிய ஆபிரகாமின் தேவனே! என் தந்தையாகிய ஈசாக்கின் தேவனே, கர்த்தாவே, என்னை என் சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போகுமாறு சொன்னீர். எனக்கு நன்மை செய்வதாகவும் சொன்னீர்.
Ուսումնասիրեք ஆதியாகமம் 32:9
11
ஆதியாகமம் 32:11
இப்போது என்னை என் சகோதரனாகிய ஏசாவிடமிருந்து காப்பாற்றும். அவனைக் குறித்து நான் அஞ்சுகிறேன். அவன் வந்து அனைவரையும் கொன்றுவிடுவான்.
Ուսումնասիրեք ஆதியாகமம் 32:11
Գլխավոր
Աստվածաշունչ
Ծրագրեր
Տեսանյութեր