YouVersion Logo
Search Icon

ரோமர் 16:25-27

ரோமர் 16:25-27 TRV

கடந்த யுகங்களில் மறைபொருளாக வைக்கப்பட்டு, இப்போது வெளிப்பட்டிருக்கின்ற உண்மையின்படி இருக்கின்ற எனது நற்செய்தியின் மூலமாகவும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை அறிவிப்பதன் மூலமாகவும் உங்களை நிலைநிறுத்த ஆற்றல் உடையவராயிருக்கின்ற இறைவனுக்கே மகிமை உண்டாகட்டும். அந்த மறைபொருளாயிருந்த உண்மை, நித்தியமான இறைவனுடைய கட்டளையினாலே, இறைவாக்கினரின் எழுத்துக்களின் மூலமாய் இப்போது வெளிப்படுத்தப்பட்டும் அறியப்பட்டும் இருக்கின்றது. எல்லா மக்களும் விசுவாசித்து அவருக்குக் கீழ்ப்படிவதற்காகவே இது நடந்தது. ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றும் மகிமை உண்டாவதாக! ஆமென்.