யாக்கோபு 1:13-14
யாக்கோபு 1:13-14 TRV
சோதிக்கப்படும்போது, “இறைவன் என்னைச் சோதிக்கிறார்” என்று ஒருவனும் சொல்லக் கூடாது. ஏனெனில் இறைவன் தீமையினால் சோதிக்கப்படக் கூடியவர் அல்ல, அவர் யாரையும் அப்படிச் சோதிக்கின்றவரும் அல்ல. மாறாக, ஒவ்வொருவனும் தனது தீய ஆசையினால் தூண்டி இழுக்கப்பட்டு அதில் சிக்கிக்கொள்ளும்போது சோதிக்கப்படுகிறான்.