எபேசியர் 2:19-20
எபேசியர் 2:19-20 TRV
ஆகையால், யூதரல்லாதவர்களாகிய நீங்கள், இனி வெளிநாட்டவர்களோ தற்காலிக குடிமக்களோ அல்ல. இப்போது நீங்களும் இறைவனுடைய மக்களுடன் குடியுரிமை பெற்றவர்களாகவும், இறைவனுடைய குடும்ப அங்கத்தினர்களாகவும் இருக்கின்றீர்கள். மேலும், அப்போஸ்தலர்களையும் இறைவாக்கினர்களையும் அத்திவாரமாகக்கொண்டு கட்டப்பட்டு, கிறிஸ்து இயேசுவை அனைத்தையும் இணைக்கும் பிரதான மூலைக்கல்லாகக் கொண்ட கட்டடமாக இருக்கின்றீர்கள்.